இந்தியாவிடம் 190 அணுகுண்டு: ஆய்வறிக்கையில் தகவல்

0
19

 ‘புல்​லடின் ஆஃப் தி அடா​மிக் சயின்​டிஸ்ட்​ஸ்’ சமீபத்தில் வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறப்​பட்​டுள்​ள​தாவது: நீண்ட தூர ஏவு​கணை​களு​டன் இந்​தி​யா​வின் தற்​காப்பு திறன் மேம்​பட்​டுள்​ளது. இந்​தி​யா​விடம் சுமார் 190 அணு குண்டு​கள் இருக்கக்​கூடும் என தெரிய​வந்​துள்​ளது.

இருப்​பினும், அணு ஆ​யுதங்​கள் இருப்​பது மட்​டுமே போது​மானதல்ல; எதிரி​யின் இலக்​கு​களைத் துல்​லிய​மாகத் தாக்​கும் திறன் கொண்ட ஏவு​கணை அமைப்​பு​களும் அவசி​ய​மாகும். அந்த வகை​யில், இந்​தியா சக்​தி​வாய்ந்த அணுகுண்​டு​கள் மற்​றும் ஹைட்​ரஜன் குண்​டு​களைக் கொண்​டிருப்​பதுடன், எதிரி நாட்டுக்குப் பதிலடி கொடுக்​கும் நீண்​டதூர ஏவு​கணை அமைப்புகளை​யும் கொண்​டுள்​ளது.

இந்​தி​யா, முதலில் அணு ஆ​யுதத்​தைப் பயன்​படுத்​தக் கூடாது என்ற கொள்​கை​யைத் தொடர்ந்து பின்​பற்றி வரு​கிறது. அதே வேளை​யில், அணு ஆயுதங்​களை செலுத்​தும் அமைப்​பு​களைத் தொடர்ந்து நவீனப்​படுத்​தி வரு​கிறது. தரை, வான், கடல் வழியே தாக்​கும் முழு​மை​யான ‘நியூக்​ளியர் ட்ரை​யாட்’ கட்​டமைப்பை இயக்கி வரு​கிறது.

அணு ஆயுதங்​களில் ரகசி​யம் காக்​கும் இந்​தியா தன்​னுடைய உத்தி​சார் ஆயுதங்​களின் முழு​மை​யான திறன், விரி​வாக்க முறைகள், அவற்​றின் உண்​மை​யான தாக்​குதல் எல்லை ஆகிய​வற்றை ஒரு​போதும் பகிரங்​க​மாக வெளி​யிடு​வ​தில்​லை. எனவே, பொது​வெளி​யில் அறியப்​படும் தரவு​கள் முழு​மை​யான திறனைக் குறிப்​பவை அல்ல. இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here