வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் புறப்பட்டுச் சென்றார்

0
21

தமி​ழ​கத்​துக்கு வெளி​நாட்டு முதலீடு​களை ஈர்ப்​ப​தற்​காக முதல்​வர் விஜய் நேற்று லண்​டன் புறப்​பட்​டுச் சென்​றார். நேற்று இரவு 10 மணி அளவில் சென்​னை​யில் இருந்து எமிரேட்ஸ் விமானம் மூலம் துபாய் சென்ற முதல்​வர், அங்​கிருந்து மற்​றொரு விமானத்​தில் லண்​டன் சென்​றார்.

லண்​டனில் முதலீட்​டாளர்​கள் சந்​திப்​பில் பங்​கேற்​கும் முதல்​வர் விஜய், பல்​வேறு தொழில் நிறு​வனங்​களின் பிர​தி​நி​தி​களைச் சந்​தித்​து, தமி​ழ​கத்​தில் தொழில் தொடங்க வரு​மாறு அழைப்பு விடுக்க உள்​ளார். லண்​டனில் உள்ள புகழ்​பெற்ற ‘சில்​வர்​ஸ்​டோன் மோட்​டார் ரேஸிங் சர்க்​யூட்’ வசதி​கள் மற்​றும் அதற்​கான சுற்​றுப்​பாதையை​யும் முதல்​வர் பார்​வை​யிட உள்​ளார்.

அப்​போது, தனது நண்​பர் நடிகர் அஜித்​கு​மாரின் கார் பந்​த​யத்தை முதல்​வர் பார்​வை​யிட இருப்​ப​தாக​வும் கூறப்​படு​கிறது. லண்​டனில் வசிக்​கும் தமி​ழர்​களைச் சந்​தித்​தும் முதல்​வர் கலந்​துரை​யாட உள்​ளார்.

இப்​பயணத்​துக்​கான முன்​னேற்​பாடு​களை மேற்​கொள்​வதற்​காக அமைச்​சர் ஆதவ் அர்​ஜு​னா, தமிழ்​நாடு விளை​யாட்டு மேம்​பாட்டு ஆணை​யத்​தின் உறுப்​பினர் செயலர் மேக​நாத ரெட்​டி, தொழில் துறை வழி​காட்டி நிறு​வனத்​தின் மேலாண்மை இயக்​குநர் தீபக் ஜேக்​கப் மற்​றும் உயர் அதி​காரி​கள் ஏற்​கெனவே லண்​டன் புறப்​பட்​டுச் சென்​றுள்​ளனர்.

லண்​டன் பயணத்தை முடித்​துக் கொண்டு முதல்​வர் விஜய் செப்​.17-ம் தேதி காலை துபாய் வழி​யாக சென்னை திரும்ப உள்​ள​தாக கூறப்படுகிறது.

சென்னை விமான நிலை​யத்​தில் விவிஐபிக்கள் மட்டுமே செல்லும் 6-வது நுழைவு​வா​யில் வழி​யாக முதல்​வருடன் அவரது நெருங்​கிய நண்​பர் விஷ்ணு ரெட்​டி செல்ல பாது​காப்பு அதி​காரி​கள் நேற்று அனுமதி மறுத்தனர். இதனால், முதல்​வர் விஜய்​யும் விவிஐபி நுழைவு​வா​யிலை தவிர்த்து, பயணி​யர் முனைய​மான டெர்​மினல் 2-ல் டி-9 நுழைவு​வா​யில் வழி​யாக உள்ளே சென்றார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here