கொளத்தூர் தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு மருத்துவமனையில் அனுமதி

0
20

கொளத்தூர் தவெக எம்​எல்ஏ வி.எஸ்​.​பாபு திடீரென ஏற்​பட்ட மூச்​சுத்​திணறல் காரண​மாக சென்​னை​யில் உள்ள தனி​யார் மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டுள்​ளார்.

சென்னை கொளத்​தூர் தொகு​தி​யில், திமுக தலை​வர் மு.க.ஸ்​டா​லினை எதிர்த்து தவெக சார்​பில் போட்​டி​யிட்டு வெற்​றி​பெற்​றவர் வி.எஸ்​.​பாபு. கடந்த ஒரு மாத கால​மாக நடந்து முடிந்த சட்​டப்​பேரவை கூட்​டத்​தொடரில் பங்​கேற்று வந்த அவருக்​கு, கடந்த சில நாட்​களாக மார்பு சளி பாதிப்பு அதி​க​மாக இருந்​த​தாகக் கூறப்​படு​கிறது.

இந்​நிலை​யில் தனது வீட்​டில் ஓய்​வில் இருந்த வி.எஸ்​.​பாபுவுக்கு நேற்று முன்​தினம் இரவு திடீரென மூச்​சுத்​திணறல் ஏற்​பட்​டது. இதையடுத்​து, அவரது குடும்​பத்​தினர் உடனடி​யாக அவரை சென்னை அமைந்​தகரை​யில் உள்ள தனி​யார் மருத்​து​வ​மனைக்கு அழைத்​துச் சென்​றனர்.

அவரை பரிசோ​தித்த மருத்​து​வர்​கள், உடனடி​யாக தீவிர சிகிச்​சைப் பிரி​வில் அனு​ம​தித்து செயற்கை சுவாசக் கருவி உதவி​யுடன் தீவிர சிகிச்சை அளித்து வரு​கின்றனர். தகவலறிந்த தவெக நிர்​வாகி​கள் மற்​றும் தொண்​டர்​கள் அவரது உடல்​நலம் குறித்து விசா​ரித்து வரு​கின்​றனர்.

இதற்​கிடையே, வி.எஸ்​.​பாபு​வின் உடல்​நிலை தொடர்​பாக மருத்​து​வ​மனை நிர்​வாகம் வெளி​யிட்​டுள்ள மருத்​துவ அறிக்​கை​யில், “சு​வாசக் கோளாறு காரண​மாக அனு​ம​திக்​கப்​பட்​டுள்ள வி.எஸ்​.​பாபு எம்​எல்ஏ தீவிர சிகிச்​சைப் பிரி​வில் பல்​துறை நிபுணர்​கள் அடங்​கிய மருத்​து​வக் குழு​வின் நேரடி கண்​காணிப்​பில் உள்​ளார்.

அவருக்கு தேவை​யான மருத்​துவ மேலாண்மை மற்​றும் சுவாச ஆதரவு சிகிச்​சைகள் தொடர்ந்து வழங்​கப்​பட்டு வரு​கின்​றன. தற்​போது அவரது உடல்​நிலை சீராக உள்​ளது” என்று அதில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

முதல்வர் நலம் விசாரித்தார்

நிதி அமைச்​சர் மரிய​வில்​சன் மருத்​து​வ​மனைக்கு சென்று வி.எஸ்​.​பாபு​விடம் நலம் விசா​ரித்​தார். பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறும்​போது, “வி.எஸ்​.​பாபு சளி பிரச்​சினை​யால் பாதிக்​கப்​பட்டு சிகிச்சை பெற்று வரு​கிறார்.

தற்​போது அவர் நலமுடன் இருக்​கிறார். முதல்​வர் விஜய் மற்​றும் அமைச்​சர் என்​.ஆனந்த் ஆகியோர் செல்​போனில் தொடர்பு கொண்டு பாபு​விடம் நலம் விசா​ரித்​தனர்” என்​றார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here