சுயசரிதை எழுதுகிறார் ஏ.ஆர்.ரஹ்மான்

0
18

தனது சுயசரிதையை எழுதிக் கொண்டிருப்பதாக  இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘ஒரு புதிய அத்தியாயம் தொடங்கி உள்ளது. ரூபா சக்கரவர்த்தியுடன் இணைந்து ‘ரஹ்மான் – எ ரினைசன்ஸ்’ என்ற புத்தகத்தை எழுதுகிறேன். அவர் அதன் இணையாசிரியராக  இருக்கிறார்.

என்னுடைய உலகை வடிவமைத்த இசை, சிந்தனைகள், சவால்கள், ஆளுமைகள் மற்றும் படைப்பாக்க பயணம் பற்றியதாக இந்தப் புத்தகம் இருக்கும். கூடுதல் விவரங்களை விரைவில் அறிவிப்பேன்’ என்று தெரிவித்துள்ளார்.

இளையராஜா உள்ளிட்ட இசையமைப்பாளர்களிடம் பணியாற்றிய ரஹ்மான் கடந்த 1992-ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘ரோஜா’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். அதன் பிறகு மணிரத்னத்துடனான ரஹ்மானின் சினிமா இன்று  வரைத் தொடர்கிறது.

தனது முதல் படத்திலேயே தேசிய விருது பெற்ற ஏ.ஆர்.ரஹ்மான், பல முறை தேசிய விருதுகள், கிராமி, கோல்டன் குளோப் உள்ளிட்ட சர்வதேச விருதுகளையும், ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ படத்துக்காக இரண்டு ஆஸ்கர் விருதுகளையும் வென்றுள்ளார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here