தொடங்கிய இடத்திலேயே படப்பிடிப்பை முடித்த ‘தகப்பன்’ குழு

0
22

ரா.வெங்​கட் இயக்​கத்​தில் ஜீவா ஹீரோ​வாக நடித்​துள்ள படம் ‘தகப்​பன்’. இதில் நாயகி​யாக ரஜிஷா விஜயன் நடித்​துள்​ளார். ‘கருடன்’, ‘மாமன்’ படங்​களைத் தயாரித்த லார்க் ஸ்டூடியோஸ் சார்​பில் குமார் தயாரிக்​கிறார்.

மதுரை மற்​றும் அதன் சுற்​று​வட்​டாரப் பகு​தி​களை பின்​னணி​யாகக் கொண்​டு, அப்பா – மகன் உறவு, குடும்ப பாசம், மனித உணர்​வு​களை மைய​மாக வைத்து உரு​வாகும் படம் இது.

கிராமத்து மண்​வாசனை​யுடன் உரு​வாகும் இப்​படத்​தின் ஃபர்​ஸ்ட் லுக் ஏற்​கெனவே வரவேற்​பைப் பெற்ற நிலை​யில், 40 நாளில் இதன் படப்​பிடிப்பை முடித்​துள்​ளனர்.

இதன் ஷூட்​டிங் மேலூர் பகு​தி​யில் உள்ள மேல​வளவு கருப்பு கோயி​லில் தொடங்​கியது. அதே இடத்​திலேயே படப்​பிடிப்பை நிறைவு செய்த படக்​குழு, கோயி​லில் கிடா வெட்​டி, அப்​பகுதி மக்​களுக்​கு விருந்​து வைத்​துள்​ளது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here