பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை அறிவிக்கை செய்ய வேண்​டும்: துரைப்பாக்கத்தில் அன்புமணி, சவுமியா விழிப்புணர்வு பிரச்சாரம்

0
18

பள்ளிக்கரணை ராம்​சார் சதுப்பு நிலத்தை வரையறைபடுத்தி அறிவிக்கை செய்​யக்​கோரி, சென்னை துரைப்​பாக்​கத்​தில் அன்​புமணி, சவுமியா ஆகியோர் விழிப்​புணர்வு பிரச்​சா​ரத்​தில் ஈடு​பட்​டனர்.

சென்னை மாநகரை பெரு​வெள்ள ஆபத்​தில் இருந்து காக்க, நிலத்​தடி நீர்​வளம் பெருக்க, பள்​ளிக்​கரணை சதுப்பு நிலத்தை சுற்றி 1 கிமீ கட்​டு​மானம் தவிர்க்க “பள்​ளிக்​கரணை ராம்​சார் சதுப்பு நிலத்தை வரையறைபடுத்தி அறிவிக்​கை” செய்​யக்​கோரி நேற்று பாமக தலை​வர் அன்​புமணி, பசுமை தாயகம் அமைப்​பின் தலை​வரும் தரு​மபுரி தொகுதி எம்​எல்​ஏவு​மான சவுமியா அன்​புமணி ஆகியோர் துரைப்​பாக்​கத்​தில் உள்ள துரைப்​பாக்​கம் – பல்​லா​வரம் 200 அடி சாலை​யில் விழிப்​புணர்வு பேரணி நடத்தி பிரச்​சா​ரத்​தில் ஈடு​பட்​டனர்.

அப்​போது, பள்​ளிக்​கரணை சதுப்பு நிலத்தை ஏன் பாது​காக்க வேண்​டும் என்ற விவரங்​கள் அடங்​கிய துண்டு பிரசுரங்​களை பொது​மக்​களுக்கு விநி​யோகம் செய்​தனர்.

இந்த நிகழ்​வில் அன்​புமணி பேசி​ய​தாவது: பள்​ளிக்​கரணை சதுப்பு நிலம் தற்​போது வரை வரையறை படுத்​தப்​பட​வில்​லை. இது​தான் பள்​ளிக்​கரணை சதுப்பு நிலம் என்று வரையறைபடுத்தி அறிவிக்கை செய்ய வேண்​டும். அப்​போது​தான் இந்த சதுப்பு நிலம் பாது​காக்​கப்​படும். இந்த நிலம் 100 ஆண்​டு​களுக்கு முன்பு 15 ஆயிரம் ஏக்​கர் அளவில் இருந்​தது.

தற்​போது 2,500 ஏக்​கர் மட்​டும் தான் இருக்​கிறது. அத்​தனை இடங்​களும் அடை​யாறு பெருங்​குடி என்று வீடு​களால் ஆக்​கிரமிக்​கப்​பட்டு விட்​டது. ஊழல் செய்​வதற்​காகத்​தான் 2 திரா​விட கட்​சிகளும் இவ்​வளவு ஆண்​டு​களாக சதுப்பு நிலத்தை பாது​காக்​க​வில்​லை. தமிழகத்​தில் 20 இடங்​களுக்கு ராம்​சார் அங்​கீ​காரம் கொடுக்​கப்​பட்​டுள்​ளது.

அதில், இந்த இடம் தான் மிக​வும் பெரியது. அது​வும் சென்​னை​யில் உள்​ளது. பசுமை தீர்ப்​பா​யம் ஆணை​யில், சதுப்பு நிலத்​துக்கு ஒரு கிமீ சுற்​றி​லும் எந்த கட்​டு​மான​மும் செய்​யக்​கூ​டாது என்று தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. இதனால் சுற்​று​வட்​டாரத்​தில் இருக்​கும் பூர்வ குடிமக்​கள் வீடு கட்ட முடி​யாமல் அவதிப்​படு​கின்​றனர்.

தமிழக அரசு எது சதுப்பு நிலம், எது​வரை இந்த நிலம் இருக்​கிறது என்​பதை அடை​யாளம் கண்டு அதை அறிவிக்​கை​யாக வெளி​யிட வேண்​டும். இளைய தலை​முறை​யில் ஏதேதோ விஷ​யங்​களுக்​காக இன்​ஸ்​டாகி​ராமில் ரீல்ஸ் போடு​கிறீர்​கள்.

பள்​ளிக்​கரணை சதுப்பு நிலத்தை பாது​காக்க விழிப்​புணர்வு ரீல்ஸ் போடுங்​கள். தமிழக சட்​டப்​பேர​வை​யின் சூப்​பர் ஸ்டா​ராக சவுமியா அன்​புமணி இருக்​கிறார். சென்​னைக்கு கண்​டிப்​பாக 2-வது விமான நிலை​யம் வேண்​டும்.

ஆனால், அதை எங்கே கொண்டு வரு​வது என்​பது​தான் பிரச்​சினை​யாக உள்​ளது. பரந்​தூரில் விவ​சாய நிலங்​கள் அழிக்​கப்​படக்​கூ​டாது. தமிழக அரசு ஒரு முடிவு எடுத்​திருக்​கிறார்​கள். அதை நாங்​கள் வரவேற்​கிறோம்.

அதே​போல், செய்​யாறு மேல்மா சிப்​காட் விரி​வாக்​கத்​துக்கு விவ​சாய நிலங்​கள் கையகப்​படுத்​தக்​கூ​டாது. பரந்​தூரில் கையகப்​படுத்​தப்​பட்ட நிலத்தை விவ​சா​யம் மற்​றும் விவ​சா​யம் சார்ந்த திட்​டத்​துக்கு தான் பயன்​படுத்த வேண்​டும்.

அங்கு மிகப்​பெரிய நீர் தேக்​கத்தை உரு​வாக்க வேண்​டும். அதை மீறி வேறு ஏதாவது திட்​டத்​திற்கு பயன்​படுத்​தி​னால் போராட்​டம் நடத்​தப்​படும். இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.

பறவை​கள் சரணால​யம்

சவுமியா அன்​புமணி பேசுகை​யில், “தமிழக அரசு பள்​ளிக்​கரணை ராம்​சார் சதுப்பு நிலத்தை அறிவிக்கை செய்ய வேண்​டும். பள்​ளிக்​கரணை சதுப்பு நிலத்தை பாது​காக்க சேட்​டிலைட் மூல​மாக அளவீடு செய்ய வேண்​டும். வேடந்​தாங்​கல் சரணால​யம் போல், பள்​ளிக்​கரணை​யில் பறவை​கள் சரணால​யம் இருக்​கிறது.

இந்த பறவை​களை​யும், இந்த இயற்​கை​யை​யும் அடுத்த தலை​முறைக்கு நாம் விட்​டுச் செல்ல வேண்​டும். இந்த பள்​ளிக்​கரணை சதுப்பு நிலத்தை நாம் பாது​காக்​க​வில்​லை என்​றால்​ மிகப்​பெரிய பா​திப்​பு ஏற்படும்” என்றார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here