மார்க் வுட் காயம்: இலங்கைக்கு எதிரான தொடரிலிருந்து விலகல்

0
207

காயம் காரணமாக இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டித் தொடரிலிருந்து இங்கிலாந்து வீரர் மார்க் வுட் விலகியுள்ளார். இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், இங்கிலாந்து வீரர் மார்க் வுட் தசைப்பிடிப்பு காரணமாக இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து விலகியுள்ளார். இதை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் உறுதி செய்துள்ளது.அவருக்கு பதிலாக அணியில் ஜோஷ் ஹல் சேர்க்கப்பட்டுள்ளார். இரு அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி வரும் 29-ம்தேதி லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here