30 மூட்டைகளில் ரூ.30 லட்சம் – யாசகம் பெற்று வாழ்ந்து மறைந்த மூதாட்டி வீட்டில் கண்டெடுப்பு

0
25

கர்நாடகா​வில் யாசகம் பெற்று வாழ்ந்த மூதாட்டி இறந்​ததை தொடர்ந்து அவரது வீட்டை ஆராய்ந்த போது 30 மூட்டைகளில் ரூ.30 லட்​சம் ரொக்​க‌ப் பணம் சேமித்து வைத்திருந்தது ஆச்​சரி​யத்தை ஏற்​படுத்​தி​யது.

கர்​நாடக மாநிலம் மண்டியா மாவட்​டத்​தில் உள்ள குதாலு பகு​தியை சேர்ந்​தவர் ஹூர் உன்​னிசா (68). இவர் அங்​குள்ள மசூ​தி​யின் வாயி​லில் யாசகம் பெற்று வாழ்க்கை நடத்தி வந்​தார்.

இந்​நிலை​யில் நேற்று முன் தினம் அவர் உடல் நலக்​குறை​வால் கால​மா​னார். அவரது வீட்டை மசூதி நிர்​வாகத்​தினர் முன்னிலையில் கிராமத்​தினர் ஆராய்ந்​தனர். அப்​போது 30-க்​கும் மேற்​பட்ட சாக்கு மூட்​டைகளில் கட்​டுக்​கட்​டாக ரூ.10, ரூ.20, ரூ.50, ரூ.100, ரூ.500 நோட்​டு​கள் கட்டி வைக்​கப்​பட்​டிருந்​தன. இதுத​விர 3 மூட்​டைகளில் நாண​யங்​களும் வைக்​கப்​பட்​டிருந்​ததை கண்டு பொது​மக்​கள் ஆச்​சரி​யம் அடைந்​தனர்.

இதையடுத்து மசூதி நிர்​வாகத்​தினர் அந்த பணத்தை மசூ​திக்கு கொண்டு சென்று பொது​மக்​கள் முன்​னிலை​யில் எண்​ணும் பணியில் ஈடு​பட்​டனர். முதல் நாள் முடி​வில் 10 மூட்​டைகளில் இருந்து ரூ.8.24 லட்​சத்தை எண்ணி முடித்​தனர். மறு​நாளான நேற்று 6 பேர் எஞ்​சிய பணத்தை எண்​ணும் பணி​யில் ஈடு​பட்​டனர். அதன் முடி​வில், 30 மூட்​டைகளில் மொத்​த​மாக ரூ.30.12 லட்​சம் இருந்​தது தெரிய​வந்​தது.

இதையடுத்து ஹூர் உன்​னி​சா​வின் இரு சகோ​தரர்​களுக்கு தகவல் தெரிவிக்​கப்​பட்​டது. அதில் ஒரு​வர் ரூ.6 லட்​சம் பெற்​றுக்​கொண்ட நிலை​யில், மற்​றொரு​வர் ரூ.2.5 லட்​சத்தை மசூ​தி​யின் வளர்ச்சி பணி​களுக்கு வழங்​கி​னார்.

எஞ்​சி​யுள்ள பணத்தை ஹூர் உன்​னி​சா​வின் ரத்த சொந்​தங்​கள் உரிமைக் கோரலாம் என மசூதி நிர்​வாகத்​தினர் அறி​வித்​துள்​ளனர். இதனிடையே மூதாட்டி யாசகம் பெற்று ரூ.30 லட்​சம் சேமித்த செய்​தி​யும்​, அந்​த பணத்​தை எண்​ணும்​ வீடியோ​வும்​ இணை​யத்​தில்​ வெளி​யாகி வைரலாகியுள்ளது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here