ஹீரோவிடம் கதை சொல்லி படம் இயக்குவது பெரிய சவால் – ‘அமரம்’ இயக்குநர் வருத்தம்

0
24

மூன்று நிலப்​பகு​தி​களில் நடக்​கும் காதல் கதை​யாக ‘அமரம்’ திரைப்​படம் உரு​வாகி​யுள்​ளது. இப்​படத்​தில், தேஜஸ் ராஜன் கதா​நாயக​னாக நடித்​துள்​ளார். மேலும் ஐரா அகர்​வால், ஜார்​ஜ், சாய் தீனா, நாகிநீடு, கல்கி ராஜன், ஹரிஷ் பெராடி, வாசுதேவன் முரளி ஆகியோர் நடித்​துள்ள னர். திருஅருள் கிருஷ்ணன் எழுதி இயக்​கி​யுள்​ளார்.

இப்​படம் ஆக.28-ல் வெளி​யாக உள்​ளது. இதன் இசை மற்​றும் டிரெய்​லர் வெளி​யீடு சென்​னை​யில் நடை​பெற்​றது. படம் பற்றி இயக்​குநர் திரு அருள் கிருஷ்ணன் கூறும்​போது, “கே.ஜி.எஃப் போன்ற படங்​களைப் பார்த்​து, அது​போன்ற திரைக்​கதையை உரு​வாக்க வேண்​டும் என்று நினைத்​தேன். ஆக் ஷன் படங்​களுக்கு சிறந்த திரைக்​கதை மிக​வும் முக்​கி​யம். ஆனால் அந்​தப் படத்தை உரு​வாக்​கு​வ​தில் பல்​வேறு சிக்​கல்​கள் ஏற்​பட்​ட​தால் அந்த முயற்​சி​யில் இருந்து விலகி இந்​தக் கதையை உரு​வாக்கினேன்.

கதை சொல்​வதற்​காக ஹீரோக்​களை சந்​திக்க முடிய​வில்​லை. ஒரு ஹீரோ​விடம் கதை சொல்லி அவரை படத்​துக்​குள் கொண்டு வரு​வது என்​பது பட்​ஜெட் உள்​ளிட்ட பல காரணங்​களால் பெரிய சவாலாக இருக்​கிறது. அவர்​களுக்கு அதி​க​மான ‘கமிட்​மென்ட்​டும்’ இருக்​கிறது. அதனால் புது​முக நடிகர் நடிப்​பில், குறைந்த பட்​ஜெட்​டில் பிரம்​மாண்​ட​மான படத்தை உரு​வாக்​கும் முயற்​சி​தான் இந்​தப் படம். இது மறுக்​கப்​பட்ட மக்​களின் வாழ்க்​கை​யைப் பேசும் கதை” என்​றார் இயக்​குநர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here