சவு​கார் ஜானகி: தவிர்க்க முடியாத நடிப்புக் கலைஞர்!

0
19

சவு​கார் ஜானகி​யின் மறைவுக்கு அரசி​யல் மற்​றும் திரைத்​துறை​யினர் இரங்​கல் தெரி​வித்​துள்​ளனர்.

முதல்​வர் விஜய் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், திரைத்​துறை​யில் 70 ஆண்​டு​களுக்​கும் மேலாகப் பயணித்​து, எண்​ணற்ற கதா​பாத்​திரங்​களுக்கு உயிரூட்​டிய சவு​கார் ஜானகி​யின் கலைப்​பணி என்​றும் போற்​றத்​தக்​கது.

தமிழ், தெலுங்​கு, மலை​யாளம், கன்​னடம், இந்தி போன்ற பல்​வேறு மொழிப் படங்​களில் நடித்து சாதனை படைத்​துள்​ளதோடு, பத்ம விருது, கலை​மாமணி விருது, நந்தி விருது உள்​ளிட்ட பல்​வேறு விருதுகளைப் பெற்​றுள்ள அவருடைய மறைவு திரை​யுல​கத்​துக்கு பேரிழப்​பாகும். அவரை இழந்து வாடும் குடும்​பத்​தினருக்​கும், உறவினர்​களுக்​கும் ஆழ்ந்த இரங்​கலைத் தெரி​வித்​துக் கொள்​வதோடு, அவரது ஆன்மா இறைவன் திரு​வடிகளில் இளைப்​பாற பிரார்த்​திக்​கிறேன்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்: தமிழில் அறிமுகமான ‘வளையாபதி’ திரைப்படத்தில் பாரதிதாசனின் வரிகளைச் சிறப்பாக உச்சரித்து, கலைஞரின் கவனத்தை ஈர்த்தவர் சவுகார் ஜானகி. அவரது நீண்ட திரைப்பயணத்தில் சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர், ஜெமினி கணேசன் உள்ளிட்ட பல பெரும் நட்சத்திரங்களுடன் நடித்திருக்கிறார்.

அண்ணா, என்.டி.ஆர். எனப் பல முதலமைச்சர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றிருக்கிறார். அவர் நடித்த வெற்றிப்படங்களின் மூலமாக தென்னிந்திய மக்களின் மனதில் அவர் என்றும் புகழோடு வாழ்வார். அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கும், திரைத்துறையினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

காங். தலை​வர் மாணிக்​கம் தாகூர்: 1950-களில் அறி​முக​மாகி தமிழ், தெலுங்​கு, கன்​னடம், மலை​யாளம் உள்​ளிட்ட பல்​வேறு மொழிகளில் நடித்து தனக்​கென தனி​யிடத்தை பிடித்​தவர் சவு​கார் ஜானகி. சிவாஜிகணேசன், எம்​.ஜி.ஆர். ஜெமினி கணேசன் உள்​ளிட்ட முன்​னணி நடிகர்​களு​டன் இணைந்து 400-க்​கும் மேற்​பட்ட திரைப்​படங்​கள் நடித்​துள்​ளார். கலைத்​துறை​யில் ஆற்​றிய பங்​களிப்​புக்​காக பத்ம விருதும் பெற்​றுள்​ளார். அவரை இழந்து வாடும் அவரது குடும்​பத்​தினருக்​கும், கலை​யுலக நண்​பர்​களுக்​கும ஆழ்ந்த இரங்​கலை​யும், அனு​தாபத்​தை​யும் தெரி​வித்​துக் கொள்​கிறேன்.

கமல்​ஹாசன்: ‘பார்த்​தால் பசி தீரும்’ படம் தொடங்கி நாற்​ப​தாண்டு காலப்​பரப்​பில் பல படங்​கள் இணைந்து பணி​யாற்​றி​யுள்ளோம். அவர் அம்​மா, நான் பிள்​ளை. தென்​னிந்​தி​யத் திரை​யின் தவிர்க்​க​விய​லாத நடிப்​புக் கலைஞர் சவு​கார் ஜானகி. அன்​றைய கதா​நாயகர்​கள் அத்​தனை பேரோடும் நடித்​தவர். என் ஆசிரியர் கே.​பாலசந்​தரின் விருப்​பத் தேர்​வாக இருந்​தவர். மறைந்​து​விட்​டார். அன்னை பிம்​பம் ஒன்று விடை​பெற்​றது. கண்​ணீரோடு வழியனுப்​பு​கிறேன்.

தேமு​திக பொதுச்​செய​லா​ளர் பிரேமல​தா: திரை​யுல​கில் தனித்​து​வ​மான நடிப்​பாற்​றலாலும் கலைத்​திறமை​யாலும் பல தலை​முறை ரசிகர்​களின் மனதில் நீங்கா இடம் பிடித்​தவர் சவு​கார் ஜானகி. தமிழ் திரை​யுல​குக்கு பெருமை சேரத்த அவரது மறைவு ஈடு​செய்ய முடி​யாத பேரிழப்​பாகும். அவருடைய ஆன்மா சாந்​தி​யடைய​வும் அவரை இழந்து வாடும் திரை​யுல​கினருக்​கும் குடும்​பத்​தா​ருக்​கும் ஆழ்ந்த இரங்​கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

நடிகர் சங்​கத் தலை​வர் நாசர்: திரை​யில் சிலரது நடிப்பு காண்​போரை நெகிழ வைக்​கும். சிலரது நடிப்பு காலத்​தையே உறைய வைக்​கும். சவு​கார் ஜானகி 2-வது வகை​யைச் சேர்ந்​தவர். இன்று ஒரு நடிகையை மட்​டும் நாம் இழக்​க​வில்​லை.

திரை​யுல​கில் பேரன்பு கொண்ட ஒரு தாய்​மை​யின் வடிவத்​தை, ஒரு சகாப்​தத்​தை, உயிரோட்​ட​முள்ள நடமாடும் வரலாற்றை இழந்​திருக்கிறோம். அவர் உச்​சரித்த ஒவ்​வொரு வசனத்​தி​லும் ஜீவனும், அவரது ஒவ்​வொரு பாவனை​யில் ஒரு கதை​யும், அவர் நடித்த ஒவ்​வொரு கதா​பாத்​திரத்​தி​லும் மனித வாழ்க்​கை​யின் மகத்​து​வம் பிர​திபலித்​தது.

பன்​மொழிப் புலமை கொண்ட அவரது பேரன்பு பொங்​கும் குரலை இனி நேரில் கேட்க முடி​யாது, கனிவே உரு​வான அந்த முகத்தை புதிய கதா​பாத்​திரத்​தில் இனி காண முடி​யாது என்​னும் உண்​மையை ஏற்​றுக்​கொள்ள மனம் மறுக்​கிறது. திரை​யுல​கிற்கு மட்​டுமல்ல, அறி​வார்ந்த சமு​தா​யத்​திற்​கும் இது ஒரு ஈடு செய்ய முடி​யாத பேரிழப்​பு.

ஆனால், சவு​கார் ஜானகி போன்ற கலைஞர்​கள் மறைவ​தில்​லை. அவர்​கள்தம் கலை​யால் இவ்​வுல​கிலும், நம் உள்​ளங்​களி​லும் அழி​வற்ற தங்​கள் ஆழமான தடத்தை தங்​களைப் பதித்​து​விட்​டுச் செல்​கிறார்​கள். காலம் மாறலாம். தலை​முறை​கள் மாறலாம். ஆனால் சவு​கார் ஜானகி என்ற பெயர் தமிழ்த் திரை​யுல​கின் வரலாற்​றில் என்​றும் அழி​யாது காலம்​ உள்​ளவரை நிலைத்​திருக்​கும்​.

அமமுக பொதுச்​செய​லா​ளர் டிடிவி தினகரன், பாமக தலை​வர் மருத்​து​வர் அன்​புமணி ராம​தாஸ், இந்​தி​யக் கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மாநில செய​லா​ளர் மு.வீர​பாண்டியன் உள்பட பல்​வேறு அரசி​யல்​ கட்​சி​யினரும்​ இரங்​கல்​ தெரி​வித்​துள்​ளனர்​.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here