அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டவற்றை ரீல்ஸாக வெளியிட்டால் நடவடிக்கை: பேரவைத் தலைவர் எச்சரிக்கை

0
169

அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டவற்றை ரீல்ஸாக வெளியிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று சட்டப்பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் நேற்று பேசியதாவது: பேரவையில் கேள்வி எழுப்பினால், நாங்களே ஆச்சரியப்படும் அளவுக்கு அமைச்சர்கள் பதில் கூறுகின்றனர்.

சட்டப்பேரவையா, சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியா என்று சந்தேகப்படும் அளவுக்கு பாட்டுகூட பாடுகின்றனர். பதில் அளிக்கும் அமைச்சர்கள், ஆளுங்கட்சி உறுப்பினர்கள் ஆதாரம் இல்லாத குற்றச் சாட்டை முன்வைக்கும்போது, அவற்றை நீங்கள் (பேரவைத் தலைவர்) அவைக் குறிப்பில் இருந்து நீக்குகிறீர்கள்.

பேரவை வரலாற்றில் முதல்முறையாக எதிர்க்கட்சியினரைவிட ஆளுங்கட்சியினரின் பேச்சுகள்தான் அவைக் குறிப்பில் இருந்து அதிகம் நீக்கப்படுகின்றன.

நீக்குவதில் அர்த்தமில்லை

அவைக் குறிப்பில் இருந்து சிலவற்றை நீக்கினாலும், அது நேரலையாக செல்லும்போது சமூக வலைதளங்களில் ரீல்ஸாக அதிகம் பகிரப்படுகின்றன. இதனால், அவைக் குறிப்பில் இருந்து நீக்குவது அர்த்தமில் லாமல் போகிறது.

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா: திமுகவின் 2021 தேர்தல் அறிக்கையில் சட்டப்பேரவை நிகழ்வுகள் நேரலை செய்யப்படும் என இருந்தது. ஏன் அதை செய்யவில்லை. ஜனநாயகத்தைக் காப்பாற்ற முதல்முறையாக பேரவை நிகழ்ச்சிகளை நேரலையில் விட்டிருக்கிறார் முதல்வர்.

அமைச்சர் ஆனந்த்: நேற்று ஒரு சந்தையில் 70 வயது முதியவர், ‘நாங்கள் இப்போது தொலைக்காட்சி சீரியல் பார்ப்பதில்லை. சட்டப்பேரவை நேரலைதான் பார்க்கிறோம்’’ என்றார். தமிழகத்தில் முதல்முறையாக நேரலையை அனுமதித்தவர் எங்கள் தலைவர்.

பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர்: யாருடனும் ஆலோசிக்காமல் தனது அறிவாற்றலால் சுயமாக முடிவெடுக்கும் திறமை முதல்வர் விஜய்க்கு இருப்பதை இந்த 3 மாத ஆட்சியில் எல்லோரும் பார்க்கின்றனர்.

உதயநிதி: திமுக ஆட்சியில்தான் நேரலை முதன்முதலாக செயல்படுத்தப்பட்டது. கேள்வி நேரத்தை நாங்கள்தான் முதல்முறையாக நேரலை செய்தோம். இப்போது கேள்வி நேரமே நடத்த முடியாத நிலைதான் உள்ளது.

பேரவைத் தலைவர்: அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டவற்றை ரீல்ஸ், வீடியோவாக வெளியிடக் கூடாது. அதுகுறித்து பேரவையின் கவனத்துக்கு கொண்டு வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

அமைச்சர் ராஜ்மோகன்: முதலில் நேரலை வழங்கியது திமுக ஆட்சி. ஆனால் முழுமையான நேரலை வழங்கியது தவெக ஆட்சி.

மத்திய அரசின் அகில இந்திய வானொலிக்கு 2 ஆண்டுகளாக பேரவையின் நேரலை ஆடியோ வழங்கப்படவில்லை. வானொலியில் நேரலையைக் கேட்க நடவடிக்கை எடுத்தவர் பேரவைத் தலைவர். இவ்வாறு விவாதம் நடை பெற்றது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here