விதிகளை மீறி கருவில் உள்ள சிசுவின் பாலினத்தை வெளியிட்ட விவகாரம்: யூடியூபர் இர்ஃபானிடம் சுகாதாரத்துறை மீண்டும் விசாரணை

0
36

யூடியூபர் இர்ஃ​பான் கடந்த 2 ஆண்​டு​களுக்கு முன்​பு, தனது கர்ப்​பிணி மனை​வியை துபாய்க்கு அழைத்து சென்​று, மருத்​து​வப் பரிசோதனை செய்​து, கரு​வில் உள்ள சிசு​வின் பாலினத்தை அறிந்து கொண்​டார்.

அதனை, தனது யூடியூப் சேனலில் வீடியோ​வாக வெளி​யிட்டு அறி​வித்​தார். அப்​போது பல்​வேறு விமர்​சனங்​கள் எழுந்​த​தால், மருத்​து​வம் மற்​றும் ஊரக நலப்​பணி​கள் இயக்​குநரகம், இர்ஃ​பானிடம் விளக்​கம் கேட்டு நோட்​டீஸ் அனுப்​பியது. இதுதொடர்​பாக, சுகா​தா​ரத்​துறை அதி​காரி​கள் அவரிடம் விசா​ரணை​ நடத்​தினர்.

இதையடுத்​து, தனது செயலுக்கு வருத்​தம் தெரி​வித்து இர்ஃ​பான் மன்​னிப்பு கடிதம் வழங்​கி​னார். இதனை ஏற்று கொண்ட அப்​போதைய சுகா​தா​ரத்​துறை அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன், இர்ஃ​பான் மீது நடவடிக்கை தேவை​யில்லை என தெரி​வித்​தார்.

இதனை எதிர்த்​து, திரு​வண்​ணா​மலை​யைச் சேர்ந்த வழக்​கறிஞர் ஜெகந்​நாதன் என்​பவர் சென்னை உயர்​ நீ​தி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்தார். இதை விசா​ரித்த நீதிப​தி​கள், 8 வாரங்​களுக்​குள் இந்த விவ​காரத்​தில் நடவடிக்கை எடுக்​கு​மாறு சுகா​தா​ரத்​துரைக்கு உத்​தர​விட்​டது.

இதைத் தொடர்ந்து, சில தினங்​களுக்கு முன்பு தேனாம்​பேட்​டை​யில் உள்ள மருத்​து​வம் மற்​றும் ஊரக நலத் துறை இயக்​குநரகத்​தில் நேரில் ஆஜராகி அதி​காரி​களிடம் விளக்​கமளித்​தார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here