கன்னியாகுமரி மாவட்ட வருவாய் கூட்டரங்கில் மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் கல்லூரி பேராசிரியர்களுக்கு மாபெரும் கல்விக் கடன் விழிப்புணர்வு மற்றும் பயிற்சி முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். அழகுமீனா, தலைமையில் நடைபெற்றது.இந்த விழிப்புணர்வுமுகாமில் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள சுமார் 150 க்கும் மேற்பட்ட கல்லூரி பேராசிரியர்களுக்கு கல்விக்கடன் சம்பந்தமான ஆலோசனை வழங்கப்பட்டது. இந்த கல்விக்கடன் விழிப்புனர்வு முகாமில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வங்கியின் மேலாளர்கள் கலந்துகொண்டனர். மேலும் இந்த முகாம் மூலம் வங்கி மேலாளர்களுக்கு இந்த ஆண்டின் நமது மாவட்டத்திற்கு தமிழ்நாடு அரசின் மூலமாக மாணவ மாணவியர்களுக்கு 85 கோடி அளவுக்கு கல்விக்கடன் வழங்க இலக்கு நிர்ணியிக்கப்பட்டது.இக்கூட்டத்தில் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் செல்வராஜ், பேராசிரியர்கள், வங்கி மேலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்