ஜூலை 27-ல் அதிமுக ஆர்ப்பாட்டம்

0
17

அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி வெளி​யிட்​ட அறிக்​கை: திரு​வள்​ளூர் மாவட்​டம், மதுர​வாயல் தொகு​தி, நெற்​குன்​றம் பல்​ல​வன் நகரில், அரசுப் பள்​ளி, வழி​பாட்​டுத் தலம், பேருந்து நிழற்​குடை இவை​களுக்கு அரு​கில் டாஸ்​மாக் மது​பானக் கடை திறக்​கப்​பட்டு செயல்​பட்டு வரு​கிறது.

இதன் காரண​மாக, அப்​பகு​தி​வாழ் மக்​களும், நாள்​தோறும் இந்​தச் சாலையை பயன்​படுத்​தும் பொது​மக்​களும் பல்​வேறு வகை​யில் சிரமங்​களை சந்​தித்து வரு​கின்​றனர்.

உடனடி​யாக இக்​கடையை மூட தவெக அரசை வலி​யுறுத்​தி, அதி​முக திரு​வள்​ளூர் மத்​திய மாவட்​டத்​தின் சார்​பில், வரும் 27-ம் தேதி, மதுர​வாயல் பகு​தி, நெற்​குன்​றம் என்​.டி. பட்​டேல் சாலை, அம்மா உணவகம் அரு​கில் கண்டன ஆர்ப்​பாட்​டம் நடை​பெறும். கட்​சி​யின் அமைப்​புச் செய​லா​ளர் கோகுல இந்​தி​ரா, திரு​வள்​ளூர் மத்​திய மாவட்ட செய​லா​ளர் ரவிச்​சந்​திரன் முன்​னிலை​யில் ஆர்ப்பாட்டம் நடை​பெறும்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here