தொல்லியல் துறை ஓய்வுபெற்ற இணை தலைமை இயக்குநர் தலைமையில் 14 பேர் கொண்ட புராதன சின்ன ஆணையம் அமைப்பு

0
20

தொல்​லியல் துறை​யின் ஓய்​வு​பெற்ற இணை தலைமை இயக்​குந​ரான எம்​.நம்​பி​ராஜன் தலை​மை​யில் 14 பேர் அடங்​கிய தமிழ்​நாடு புராதன சின்​னங்​கள் ஆணை​யம் அமைத்து தமிழக அரசு உத்​தர​விட்​டுள்​ள​தாக உயர் நீதி​மன்​றத்​தில் அறநிலை​யத்​துறை தெரி​வித்​துள்​ளது.

திரு​வண்​ணா​மலை அருணாச்​சலேஸ்​வரர் கோயி​லில் அறநிலை​யத்​துறை சார்​பில் நிறைவேற்​றப்​பட​வுள்ள திட்​டங்​கள் குறித்​தும், கோயி​லின் பழமை மற்​றும் புராதன சின்​னங்​களை பாது​காக்க 2012-ம் ஆண்டு இயற்​றப்​பட்ட புராதன சின்​னங்​கள் ஆணைய சட்​டத்​தின்​கீழ் தமிழ்​நாடு புராதன சின்​னங்​கள் பாது​காப்பு ஆணை​யம் அமைக்க ஏற்​படும் கால​தாமதம் குறித்​தும் ஏற்​கெனவே கண்​டனம் தெரி​வித்த சென்னை உயர் நீதி​மன்​றம், இதுதொடர்​பாக அறிக்கை தாக்​கல் செய்ய அறநிலை​யத் துறைக்கு உத்​தர​விட்​டிருந்​தது.

இந்​நிலை​யில், இந்த வழக்கு நீதிப​தி​கள் ஜி.ஜெயச்​சந்​திரன், எஸ்​.சவுந்​தர் ஆகியோர் அடங்​கிய சிறப்பு அமர்​வில் நேற்று விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது, அறநிலை​யத்​துறை தரப்​பில் இந்​திய தொல்​லியல் துறை​யின் ஓய்வு பெற்ற இணை தலைமை இயக்​குநர் எம். நம்​பி​ராஜன் தலை​மை​யில் 14 உறுப்​பினர்​கள் கொண்ட தமிழ்​நாடு புராதன சின்​னங்​கள் ஆணை​யத்தை அமைத்து தமிழக அரசு இன்று (ஜூலை 16) உத்​தரவு பிறப்​பித்​துள்​ளது என தெரிவிக்​கப்​பட்​டது.

அதையடுத்து நீதிப​தி​கள், இந்த ஆணை​யம் திரு​வண்​ணா​மலை அருணாச்​சலேஸ்​வரர் கோயி​லின் நான்​காவது பிர​காரத்​தில் புதி​தாக கட்​டப்​பட்டு வரும் பக்​தர்​களுக்​கான காத்​திருப்​போர் கூடத்தை ஆய்வு செய்து ஜூலை 29-ம் தேதிக்​குள் அறிக்கை தாக்​கல் செய்ய வேண்​டும் என உத்​தர​விட்​டனர்.

மேலும், திரு​வண்​ணா​மலை கோயி​லில் பக்​தர்​கள் சுவாமி தரிசனம் செய்​வதற்கான நேரத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்​டும். கோயிலுக்கு வெளியே மேற்​கொள்​ளப்படவுள்ள கட்​டு​மானங்​கள் குறித்த திட்​டங்​களை புராதன ஆணை​யத்​தின் ஒப்​புதலை பெற்று தொடரலாம்.

கிரிவலப் பாதை​யில் பவுர்​ணமி உள்​ளிட்ட முக்​கிய நாட்​களில் திடீரென முளைக்​கும் தற்​காலிக கடைகள் மற்​றும் சன்​னி​யாசிகளால் பக்​தர்​களுக்கு ஏற்​படும் இடையூறுகளைக் களைய மாவட்ட எஸ்​பி​யுடன் இணைந்து மாவட்ட ஆட்​சி​யர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்​டும்.

குறிப்​பாக சன்​னி​யாசிகள் என்ற போர்​வை​யில் சட்​ட​விரோத நடவடிக்​கை​களில் ஈடு​படு​வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்​டும். மலை​யடி​வாரத்​தில் உள்ள சட்​ட​விரோத கட்​டு​மானங்​கள் மீது என்ன நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ளது என்​பது உட்பட இந்த வழக்​கில் சுட்​டிக்​ காட்​டப்​பட்​டுள்ள விஷ​யங்​கள் குறித்து மாவட்ட நிர்​வாக​மும், அறநிலை​யத்​துறை அதி​காரி​களும் அறிக்கை தாக்​கல் செய்ய வேண்​டும் என உத்​தர​விட்​டு வி​சா​ரணை​யை ஜூலை 30-க்​கு தள்​ளி வைத்​துள்​ளனர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here