கல்வி சீர்திருத்தத்துக்கான கையெழுத்து இயக்கத்தை தொடங்கினார் ராகுல் காந்தி

0
22

கல்வி சீர்​திருத்​தத்​துக்கான போராட்​டத்தை ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் ராகுல் காந்தி நேற்று முன்தினம் தொடங்​கி​னார். வினாத்​தாள் கசிவு, தேர்வு முறை​கேடு போன்றவை குறித்து அவர் மாணவர்​களு​டன் கலந்துரையாடினார். இந்​நிலை​யில் கல்வி சீர்​திருத்​தத்​திற்​கான கையெழுத்து இயக்​கத்தை ராகுல் நேற்று தொடங்​கி​னார்.

இது குறித்து எக்ஸ் தளத்​தில் ராகுல் காந்தி கூறி​யிருப்​ப​தாவது: வினாத்​தாள் கசிவு, தேர்வு குளறு​படிகள், அதிக கட்​ட​ணம் ஆகியவற்​றால் நீங்​கள் பாதிக்​கப்​பட்​டிருந்​தால், இந்த கல்வி முறை உங்​கள் கனவு​களைத் தகர்த்​திருந்​தால் ‘சாத்​ரோன் கி கூஞ்ச்’ (மாணவர்​களின் குரல்) தளத்​தில் உங்​கள் கருத்​துகளை தெரிவிக்கலாம். இந்த முயற்சி குறைந்த கட்டண கல்​வி, நியாயமான தேர்​வு​கள் மற்​றும் கண்​ணி​ய​மான வேலை வாய்ப்புகள் போன்ற பிரச்​சினை​களை மாணவர்​கள் எழுப்புவதற்கான ஒரு தளம்.

https://rahulgandhi.in/chhatron-ki-goonj என்ற இணைப்பை கிளிக் செய்து இந்த இயக்​கத்​தில் மாணவர்​கள் இணைய வேண்​டும். உங்கள் பெயரைப் பதி​விட்​டு, உங்​கள் கருத்​துகளைப் பகிர்ந்து மனு​வில் கையெழுத்​திடுங்​கள். அதி​க​மான கையெழுத்​துகள் மூலம் மாணவர்​களின் குரல் இன்​னும் சத்​த​மாக ஒலிக்​கும். இவ்வாறு ராகுல்​ காந்​தி கூறியுள்​ளார்​.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here