மேகேதாட்டு அணை திட்டம் குறித்து தமிழக முதல்வர் விஜய்யுடன் பேச தயார்: கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் அறிவிப்பு

0
25

மேகே​தாட்டு அணை திட்​டம் குறித்து தமிழக முதல்வர் விஜய்​யுடன் பேச்​சு​வார்த்தை நடத்த தயா​ராக இருப்பதாக கர்​நாடக முதல்​வர் டி.கே.சிவகு​மார் தெரி​வித்​தார்.

இது குறித்து பெங்​களூரு​வில் கர்​நாடக முதல்​வர் டி.கே.சிவகு​மார் நேற்று செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: மேகே​தாட்டு அணை திட்​டம் என் இதயத்​துக்கு நெருக்​க​மானது மட்​டுமல்ல. ஒட்​டு மொத்த தென்​னிந்​தி​யா​வுக்​கும் நெருக்​க​மானது. உச்​ச நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்​பின்​படி ஆண்​டு​தோறும் தமிழகத்துக்கு 177 டிஎம்சி நீரை வழங்க கர்​நாடகா தயா​ராக இருக்​கிறது.

இந்த திட்​டம் தொடர்​பாக தமிழக முதல்​வர் விஜ​ய்யுடன் பேச்சுவார்த்தை நடத்த தயா​ராக இருக்​கிறேன். இந்த திட்​டத்​தால் இரு மாநிலங்​களுக்​கும் நன்மை ஏற்​படும். கன்​னடர்​களாக இருந்தா​லும், தமிழர்​களாக இருந்​தா​லும் நாமெல்​லாம் இந்தியர்கள் என்​பதை நினை​வில் வைத்​துக்​கொள்ள வேண்​டும்.

தமிழகத்தை சேர்ந்​தவர்​கள் கர்​நாட​கா​விலும், கர்​நாட​காவை சேர்ந்​தவர்​கள் தமிழகத்​தி​லும் வாழ்​கிறார்​கள். நீர் அனைத்து மக்களுக்​கும் தேவை​யான ஒன்​று. மேகே​தாட்டு திட்​ட​மானது சம நிலை அணை திட்​ட​மாகும். அங்கு நீரை தேக்​கி​னால் வறட்சி காலத்​தில் தமிழகத்​துக்கு நீரை எளி​தாக திறந்​து​விடலாம்.

தமிழகத்​துக்கு வழங்க வேண்​டிய நீரில் இருந்து ஒரு வாளி நீரை கூட நம்​மால் எடுக்க முடி​யாது. அணை நீரை பெங்​களூரு மக்களின் குடிநீர் தேவைக்கு பயன்​படுத்த முடி​யும். மண்​டி​யா, ஹாசன், சாம்​ராஜ்நகர், துமகூரு ஆகிய‌ மாவட்​டங்​களுக்​கும் எளிதாக குடிநீர் வழங்​கலாம். இந்த திட்​டத்​துக்கு மத்​திய நீர் ஆணை​யம் விரைந்து அனு​மதி வழங்க வேண்​டும். மேகே​தாட்டு விவ​காரத்​தில் கர்​நாட​கா​வில் காங்​கிரஸ், பாஜக, மஜத ஆகிய அனைத்​துக்​ கட்சி எம்​.பிக்​களும் ஒரு​மித்த குரலில் செயல்படுவார்கள்​. இவ்​வாறு அவர்​ தெரிவித்​தார்​.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here