அதிரடி​யாக விளை​யாடியது எப்படி? – மனம் திறக்கும் ரஜத் பட்டிதார்

0
29

ஐபிஎல் தொடரில் நேற்று முன்​தினம் தரம்​சாலா​வில் நடை​பெற்ற தகுதி சுற்று 1 ஆட்​டத்​தில் நடப்பு சாம்​பிய​னான ஆர்சிபி அணி 92 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் முன்​னாள் சாம்பியனான குஜ​ராத் டைட்​டன்ஸ் அணியை வீழ்த்தி இறு​திப் போட்​டிக்கு முன்​னேறியது. முதலில் பேட் செய்த ஆர்சிபி 5 விக்கெட்​கள் இழப்​புக்கு 254 ரன்​கள் குவித்து மிரட்​டியது. கேப்​டன் ரஜத் பட்டிதார் 33 பந்​துகளில், 9 சிக்​ஸர்​கள், 5 பவுண்​டரி​களு​டன் 93 ரன்​கள் விளாசி​னார்.

255 ரன்​கள் இலக்கை துரத்​திய குஜ​ராத் டைட்​டன்ஸ் அணி 19.3 ஓவர்​களில் 162 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. அதி​கபட்​ச​மாக ராகுல் டெவாட்​டியா 68, ஜாஸ்​பட்​லர் 29, சாய் சுதர்​சன் 14 ரன்​கள் சேர்த்தனர். கேப்​டன் ஷுப்​மன் கில் உள்​ளிட்ட மற்ற எந்த பேட்​ஸ்​மேனும் இரட்டை இலக்க ரன்னை எட்​ட​வில்​லை. இந்த ஆட்​டத்​தில் தோல்வி அடைந்த போதி​லும் குஜ​ராத் டைட்​டன்ஸ் அணி இறு​திப் போட்​டிக்கு முன்​னேறு​வதற்கு மேலும் ஒரு வாய்ப்பு உள்​ளது. அந்த அணி தகுதி சுற்று 2-ல் விளை​யாட உள்​ளது.

குஜ​ராத் அணிக்கு எதி​ரான ஆட்​டத்​தில் ஆட்ட நாயகன் விருது வென்ற ஆர்​சிபி அணி​யின் கேப்​டன் ரஜத் பட்​டி​தார் கூறிய​தாவது: தகுதி சுற்று ஆட்​டம் எங்​களுக்கு அற்​புத​மான ஆட்​ட​மாக அமைந்தது. பேட்​டர்​கள் ஆதிக்​கம் செலுத்​திய விதம், ரன் குவிக்க வேண்​டும் என்ற உறு​தி​யோடு விளை​யாடியது எங்​களுக்கு சாதகமாக அமைந்​தது. இது ஒரு தெளி​வான திட்​ட​மிடலாக இல்​லா விட்​டாலும், நாங்​கள் அதற்கு தயா​ராகவே இருந்​தோம்.

எதிரணியை எதிர்​கொள்ள நாங்​கள் தயா​ராக இருக்​கிறோம் என்பதை எங்​களது உடல் மொழி​யிலேயே காட்​டினோம். தாக்குதல் ஆட்ட மனநிலை​யிலேயே விளை​யாடினோம். ஆடு​களத்தின் தன்மை எப்​படி இருக்​கிறது என்​பதை பார்ப்​ப​தற்​காக 8-10 பந்​துகளை நிதான​மாக எதிர்​கொள்​வேன். அதன் பிறகே, ஆட்டத்தை எப்​படி எதிர்​கொள்​வது என்​ப​தில் எனக்கு ஒரு தெளிவான சிந்​தனை கிடைக்​கும். என் விக்​கெட்​டைப் பற்றி நான் கவலைப்​படு​வ​தில்​லை.

பந்​து​வீச்​சாள​ருக்கு அழுத்​தத்தை ஏற்​படுத்​தவே நான் முயற்சி செய்​கிறேன். ஆடு​களத்​தின் தன்மை பேட் செய்​வதற்கு அவ்​வளவு எளி​தாக இல்​லை, பந்​துகள் வெவ்​வேறு உயரங்​களில் எழும்​பின. குஜ​ராத் டைட்​டன்ஸ் அணி இந்த தொடரில் விளை​யாடிய விதத்தை வைத்​து, பவர்​பிளே​யிலேயே அவர்​களு​டைய முக்கியமான மூன்று பேட்​டர்​களை ஆட்​ட​மிழக்​கச் செய்ய வேண்டும் என்​ப​தில் நாங்​கள் தெளி​வாக இருந்​தோம், அது நல்ல பலனைத் தந்​தது. இவ்​வாறு ரஜத்​ பட்​டி​தார்​ கூறி​னார்​.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here