ஆந்திர இளம்பெண்ணை போலீஸார் வன்கொடுமை செய்த வழக்கை விரைந்து முடிக்க ஐகோர்ட் உத்தரவு

0
24

திரு​வண்​ணா​மலைக்கு சுவாமி தரிசனத்​துக்கு வந்த ஆந்​தி​ராவைச் சேர்ந்த இளம்​பெண்ணை போலீ​ஸார் வன்கொடுமை செய்த வழக்கை வரும் ஜூலைக்​குள் விசா​ரி்த்து முடிக்க வேண்​டுமென மகளிர் நீதி​மன்​றத்​துக்கு உயர் நீதி​மன்ற நீதிப​தி​கள் உத்​தர​விட்​டுள்​ளனர்.

ஆந்​திர மாநிலம் காளஹஸ்​தி​யில் இருந்து கடந்​தாண்டு செப்​டம்​பர் மாதம் தனது வளர்ப்​புத் தாயார் மற்​றும் மாமாவுடன் சரக்கு வாக​னத்​தில் திரு​வண்​ணா​மலைக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்த 26 வயது இளம்​பெண்ணை மிரட்டி பாலியல் வன்​கொடுமை செய்​த​தாக திரு​வண்​ணா​மலை கிழக்கு காவல் நிலை​யத்​தைச் சேர்ந்த போலீஸ்​காரர்​களான சுந்​தர், சுரேஷ் ராஜ் ஆகியோர் மீது திரு​வண்​ணா​மலை அனைத்து மகளிர் போலீ​ஸார் வழக்​குப்​ப​திவு செய்​தனர். இந்த சம்​பவத்​தையடுத்து இரு போலீ​ஸாரும் பணி​யில் இருந்து டிஸ்​மிஸ் செய்​யப்​பட்​டனர்.

திரு​வண்​ணா​மலை மாவட்ட மகளிர் சிறப்பு நீதி​மன்​றத்​தில் நிலு​வை​யில் உள்ள இந்த வழக்​கில், குற்​றப்​பத்​திரிக்கை தாக்​கல் செய்​தும், 2 மாதத்துக்குள் விசா​ரணையை முடிக்​காமல் தாம​தித்து வரு​வ​தாக​வும் எனவே விரைந்து விசா​ரித்து முடிக்க உத்​தர​விடக் கோரியும் பாதிக்​கப்​பட்ட இளம்​பெண் தரப்​பில் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் பொதுநல வழக்கு தொடரப்​பட்​டது. இந்த வழக்கு நீதிப​தி​கள் ஜி.ஆர். சுவாமி​நாதன், வி.லட்​சுமி நாராயணன் அமர்​வில் நேற்று விசா​ரணைக்கு வந்​தது.

அரசு தலைமை வழக்​கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி, பாலியல் வழக்​கு​களில் விரைந்து நீதி வழங்​கும் வகை​யில் நீதி​மன்​றங்​களின் உள்​கட்​டமைப்பு வசதி​கள் மேம்​படுத்​தப்​படும். மரபணு சோதனை மற்​றும் தடயவியல் ஆய்​வகங்​களை அதி​களவில் அமைக்​கும் நடவடிக்​கைகள் எடுக்​கப்​பட​வுள்​ளன. இது தொடர்​பாக விரி​வான அறிக்கை தாக்​கல் செய்ய அவகாசம் வழங்க வேண்​டும் எனக் கேட்டுக் கொண்டார்.

அதையடுத்து நீதிப​தி​கள், இந்த வழக்கு விசா​ரணையை வரும் ஜூன் 22-க்கு தள்​ளி​வைத்​தனர். அதே​நேரம் இந்த வழக்கு விசா​ரணையை துரிதப்​படுத்த திரு​வண்​ணா​மலை மகளிர் நீதி​மன்ற நீதிபதி நடவடிக்கை எடுக்​காதது ஏன் என்​பது புரிய​வில்லை என கேள்வி எழுப்​பிய நீதிப​தி​கள், தினந்​தோறும் என்ற அடிப்​படை​யில் விசா​ரித்து ஜூலை 31-க்குள் முடிக்க திரு​வண்​ணா​மலை மகளிர் நீதி​மன்​றத்​துக்கு உத்​தர​விட்​டனர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here