தகுதி சுற்று 1: ஆர்சிபி – குஜராத் அணிகள் இன்று பலப்பரீட்சை

0
21

ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு தரம்சாலாவில் நடை​பெறும் தகுதி சுற்று 1-ல் நடப்பு சாம்பியனான ஆர்சிபி அணி, முன்​னாள் சாம்​பிய​னான குஜராத் டைட்டன்ஸ் அணி​யுடன் பலப்​பரீட்சை நடத்​துகிறது.

இரு அணி​களுமே லீக் சுற்றை தலா 18 புள்​ளி​கள் பெற்று முதல் இரு இடங்​களு​டன் நிறைவு செய்​திருந்​தன. நிகர ரன் விகித அடிப்படை​யில் ஆர்​சிபி அணி முதலிடத்தை பிடித்​திருந்​தது. ஆர்சிபி, குஜ​ராத் டைட்​டன்ஸ் ஆகிய இரு அணி​களுமே இந்த சீசனில் மிகவும் நிறை​வான அணி​களாகத் திகழ்​கின்​றன. கேப்டன் ரஜத் படி​தார் தலை​மையி​லான ஆர்​சிபி அணி அதிரடியான பேட்​டிங் மற்​றும் கடந்த சீசன்​களைக் காட்​டிலும் மிகவும் நம்​பகத்​தன்மை வாய்ந்த பந்​து​வீச்​சுப் படை ஆகியவற்றைக் கொண்டே கட்டமைத்துள்​ளது.

நடப்பு சாம்​பிய​னான ஆர்​சிபி அணி, இந்த சீசனில் 8 முறை 200 ரன்​களுக்கு மேல் குவித்து அசத்​தி​யுள்​ளது. தொடக்க வீர​ராக களம் இறங்​கும் ஜாம்​ப​வான் விராட் கோலி​யின் அபார அனுபவ​மும், பந்து​வீச்​சில் ஜோஷ் ஹேசில்​வுட், புவனேஷ்வர் குமார் ஆகியோரின் வேகப்​பந்து வீச்சு கூட்​ட​ணி​யின் பங்​களிப்​பும் அந்த அணிக்கு மிகப்​பெரிய அளவில் பலன் அளித்​துள்​ளன. பேட்டிங்கில் தேவ்​தத் படிக்​கல், ரஜத் பட்​டி​தார், வெங்​கடேஷ் ஐயர், டிம் டேவிட், கிருணல் பாண்​டியா ஆகியோ​ரும் தங்​களது பங்களிப்பை வழங்கி வரு​கின்​றனர்.

தங்​கள் சொந்த மைதானம் அல்​லாத பிற மைதானங்​களி​லும் வெற்றி பெறும் திறன் மற்​றும் நூலிழை​யில் நகரும் பரபரப்​பான போட்​டிகளை வெற்​றிகர​மாக முடிக்​கும் சாமர்த்​தி​யம் ஆகிய​வை, லீக் சுற்​றில் மிக​வும் சீரான ஆட்​டத்தை வெளிப்​படுத்​திய சிறந்த அணி​களில் ஒன்​றாக ஆர்​சிபியை மாற்​றின. அது​மட்​டுமின்​றி, தரம்​சாலா மைதானத்​தின் சுழல் மற்​றும் வேகம் குறித்த நில​வரத்தை அறிந்​திருப்​பது ஆர்​சிபிக்கு கூடு​தல் சாதக​மாக உள்​ளது. ஏனெனில், இதே மைதானத்​தில் கடந்த 17-ம் தேதி பஞ்​சாப் கிங்ஸ் அணிக்கு எதி​ராக நடை​பெற்ற ஆட்​டத்​தில் ஆர்​சிபி அணி வெற்றி கண்​டிருந்​தது.

மறு​புறம் குஜ​ராத் டைட்​டன்ஸ் அணி தங்​களின் அச்​சுறுத்​தக்​கூடிய பந்​து​வீச்​சுப் படை மற்​றும் எதிரணி​யின் அழுத்​தத்தை தங்களுக்குள் துளி​யும் புக​வி​டாத டாப்​-ஆர்​டர் பேட்​டிங் வரிசையின் பலத்​தால் பிளே-ஆஃப் சுற்​றுக்​குள் கம்​பீர​மாக நுழைந்​துள்​ளது. கேப்​டன் ஷுப்​மன் கில், திறம்பட விளை​யாடும் சாய் சுதர்​சன், அதிரடி விக்​கெட் கீப்​பர்​-பேட்​ஸ்​மேன் ஜாஸ் பட்​லர் ஆகியோர் அணிக்​குத் தேவை​யான ஸ்திரத்​தன்​மை​யை​யும் அதே நேரத்​தில் அதிரடி ஆட்​டத்​தை​யும் சரிசம​மாக வழங்கி வருகின்றனர்.

இருப்​பினும் இந்த சீசனின் பிற்​பா​தி​யில் குஜ​ராத் டைட்​டன்ஸ் அணியை தனித்​துத் தெரியச் செய்​தது அவர்​களின் பந்​து​வீச்சு தான். முகமது சிராஜ், காகிசோ ரபா​டா, பிரசித் கிருஷ்ணா ஆகியோரை உள்​ளடக்​கிய வேகப்​பந்து வீச்சு துறை புதிய பந்​தில் தொடர்ந்து விக்​கெட்​டு​களை வீழ்த்தி அசத்​தி​யுள்​ளனர். அதே வேளை​யில் ரஷித் கான், சாய் கிஷோர் ஆகியோர் தங்​களது சுழற்​பந்து வீச்​சால் மிடில் ஓவர்​களில் ரன்​களைக் கட்​டுப்​படுத்தி ஆட்டத்தை கட்​டுப்​படுத்​து​வ​தில் சிறப்​பாக செயல்​பட்​டுள்​ளனர்.

தரம்​சாலா ஆடு​களம் பவுன்​ஸுக்கு அதி​கம் கைகொடுக்​கும் என்பதால் ராபா​டா, விராட் கோலிக்கு தொடக்க ஓவர்​களில் அழுத்தம் கொடுக்​கக்​கூடும். காயத்​தில் இருந்து மீண்​டு​ வந்துள்ளபில் சால்ட்​டுக்​கும் குஜ​ராத் அணி​யின் வேகப்​பந்து வீச்சு துறை சவால்​ தரக்​கூடும். மறு​முனை​யில் ஷுப்​மன் கில், சாய் சுதர்​சன் ஆகியோரது திறனை ஜோஷ் ஹேசில்​வுட், புவனேஷ்வர் குமார் கூட்​டணி கடுமை​யாக சோதனைக்கு உட்​படுத்​தக்​கூடும். இந்த வேகப்​பந்து வீச்சு கூட்​டணி நடப்பு சீசனில் எதிரணி​களின் டாப்​-ஆர்​டர் வரிசையை ஆரம்​பத்​திலேயே வீழ்த்தி அசத்தியுள்ளது.

குஜ​ராத் அணி தங்​களின் முதல் மூன்று பேட்​ஸ்​மேன்​களை பெரிதும் நம்பி உள்​ளது. இதனால் முதல் 6 ஓவர்​கள் இரு அணிகளுக்​குமே மிக முக்​கிய​மான​தாக அமையக்​கூடும். மிடில் ஓவர்​களில் ரஷித் கானுக்​கும் வலதுகை பேட்​ஸ்​மேன்​கள் அதி​கம் நிறைந்த ஆர்​சிபி அணி​யின் பேட்​டிங் வரிசைக்​கும் இடையேயான மோதல் போட்​டி​யின் வெற்​றியைத் தீர்​மானிப்பதாக அமைய​லாம். இருப்​பினும், சுழற்​பந்து வீச்சை மிகச் சிறப்​பாக எதிர்​கொண்டு விளை​யாடக்​கூடிய ரஜத் படி​தா​ரின் அதிரடி ஆட்​டம், பெங்​களூரு அணிக்கு ரஷித் கானின் சவாலை முறியடிப்​ப​தற்​கான ஒரு முக்​கிய எதிர்​-ஆ​யுத​மாக இருக்​கக்​கூடும்.

இரு அணி​யிலும் ஆட்​டத்​தின் போக்கை மாற்​றக்​கூடிய மேட்ச் வின்​னர்​கள் பலர் உள்​ளனர். இதனால் தகுதி சுற்று 1 ஆட்​ட​மானது ஆர்​சிபி அணி​யின் ஆழமான பேட்​டிங் வரிசைக்​கும், குஜ​ராத் அணி​யின் இடை​வி​டாத அச்​சுறுத்​தும் பந்​து​வீச்​சுக்​கும் இடையே நடக்​கும் மோதலாக அமையக்​கூடும். இன்​றைய ஆட்​டத்​தில் வெற்றி பெறும் அணி நேரடி​யாக இறு​திப் போட்​டிக்கு முன்னேறும். தோல்வி அடை​யும் அணிக்கு மற்​றொரு வாய்ப்பு கிடைக்​கும்.

தகுதி சுற்று 1-ல் தோல்வி அடை​யும் அணி தகுதி சுற்று 2-ல் விளையாடும். இந்த ஆட்​டத்​தில் எலிமினேட்​டர் சுற்​றில் வெற்றி பெறும் அணி​யும் பங்​கேற்​கும். எலிமினேட்​டர் ஆட்​டத்​தில் நாளை (27-ம்​ தேதி) ராஜஸ்​தான்​ ராயல்​ஸ்​ – சன்​ரைசர்​ஸ்​ ஹைத​ரா​பாத்​ அணிகள்​ மோதுகின்றன.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here