“பந்துவீச்சே எங்கள் பலம்… தொடக்கத்திலேயே விக்கெட்கள் வீழ்த்த முயற்சிப்போம்” – ஆர்சிபி கேப்டன் ரஜத் பட்டிதார்

0
21

ஐபிஎல் தொடர் இறு​திக்​கட்​டத்தை எட்டி உள்​ளது. தரம்சாலாவில் இன்று நடை​பெறும் தகுதி சுற்று 1 ஆட்​டத்​தில் நடப்பு சாம்​பிய​னான ஆர்சிபி, குஜராத் டைட்டன்ஸ் அணி​யுடன் பலப்​பரீட்சை நடத்த உள்​ளது.

இந்​நிலை​யில் தரம்​சாலா​வில் நேற்று நடை​பெற்ற பத்திரிகையாளர்​கள் சந்​திப்​பின் போது ஆர்​சிபி அணி​யின் கேப்டன் ரஜத் பட்​டி​தார் கூறிய​தாவது: ஐபிஎல் தொடர் பந்​து​வீச்சாளர்​களுக்கு மிக​வும் சவாலானது. ஆடு​களங்​கள் பேட்டிங்கிற்கு சாதக​மாக இருக்​கின்​றன. எல்​லைக்​கோடு​கள் சிறிய​தாக உள்​ளன. அதோடு பனிப்​பொழி​வும் இருக்​கிறது. வேகப்பந்து வீச்​சாளர்​கள் செய்​யும் சிறிய தவறு கூட சிக்​ஸ​ராக மாறி​விடு​கிறது. ஆனால், எந்த மாதிரி​யான ஆடு​களம் அல்​லது சூழல் கிடைத்​தா​லும், அதில் எங்​களது சிறந்த பங்​களிப்பை வழங்கவே நாங்​கள் முயற்சி செய்​கிறோம். ஆடு​களங்​கள் எப்​படி இருக்க வேண்​டும் என்று தீர்​மானிப்​பது என் கைகளில் இல்​லை.

இறு​திப் போட்டி பெங்​களூரு​வில் இருந்து அகம​தா​பாத்​துக்கு மாறியதும் என் கட்​டுப்​பாட்​டில் இல்​லை. இது ஒரு வரலாற்​றுச் சிறப்​புமிக்க மைதானம். எனவே இறு​திப்​போட்டி எங்கு நடக்​க​விருக்​கிறதோ, அங்​கு​தான் அது நடக்​கும். இறு​திப்​போட்​டிக்கு முன்னேறு​வ​தில் மட்​டுமே நாங்​கள் கவனம் செலுத்தி வரு​கிறோம். இந்த சீசன் முழு​வதும் நாங்​களும், குஜ​ராத் அணி​யும் சிறப்​பாகச் செயல்​பட்​டுள்​ளோம். போட்டி நடை​பெறும் குறிப்​பிட்ட நாளில், எந்த அணி தங்​களது திட்​டங்​களைச் சரி​யாகச் செயல்​படுத்துகிறதோ மற்​றும் அழுத்​த​மான சூழலில் பதற்​றமடை​யாமல் நிதான​மாக இருக்​கிறதோ, அந்த அணியே வெற்றி பெறும்.

பந்​து​வீச்​சு​தான் எங்​களது பலம். பவர்​பிளே​யில் நாங்​கள் எப்​படி பந்​து​வீசுகிறோம் என்​பது மிக​வும் முக்​கிய​மான​தாக இருக்​கும். மேலும் நாங்​கள் இங்கு ஸ்கோரை டிஃபென்ட் செய்ய வரவில்​லை, எதிரணி​யைத் தாக்கி விளை​யாடும் மனநிலை​யுடன்​தான் இங்கு வந்​திருக்​கிறோம் என்​பது அணி​யில் உள்ள அனை​வருக்​கும் தெரியும். நாங்​கள் ஆரம்​பத்​திலேயே விக்​கெட்​டு​களை வீழ்த்தப்பார்ப்​போம்.

இது​வரை நாங்​கள் அதைத்​தான் செய்​திருக்​கிறோம். ஒரே விஷயத்தை மீண்​டும் துல்​லிய​மாக செய்​வது​தான் ஆட்​டத்​தின் முடி​வில் பெரிய மாற்​றத்தை ஏற்​படுத்​தும். புவனேஷ்வர்​கு​மார் அனுபவம் வாய்ந்த பந்​து​வீச்​சாளர். அவருக்​குத் தனது பலம் என்னவென்று நன்​றாகத் தெரி​யும். அவர், அணி​யில் உள்ள இளம் பந்​து​வீச்​சாளர்​களிடம் பேசும் வித​மும், அணி​யில் அவர் இருப்பதும் எங்​களுக்கு மிக​வும் முக்​கிய​மானது. பில் சால்ட் உடற்​தகு​தி​யுடன் இருக்​கிறார். பயிற்​சிகளை​யும் மேற்​கொண்டு வருகிறார். ஆனால் விளை​யாடும் லெவனை நாங்​கள் இன்​னும் முடிவு செய்​ய​வில்​லை. இவ்​வாறு ரஜத்​ பட்​டி​தார்​ கூறி​னார்​.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here