வியட்நாமின் டா நங்க் நகரில் யு-23 ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான 57 கிலோ எடைப் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் அக் ஷய் 4-2 என்ற கணக்கில் கஜகஸ்தானின் எலமன் அமன்கெல்டியை தோற்கடித்து தங்கப் பதக்கம் வென்றார்.
97 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் விக்கி 7-5 என்ற கணக்கில் உஸ்பெகிஸ்தானின் ஷெர்சோத் பொயனோவ்வை வீழ்த்தி தங்கம் வென்றார். 53 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் முஸ்கான் 6-2 என்ற கணக்கில் வியட்நாமின் தி மைலின் நுயெனை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார். மகளிருக்கான 57 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் டாப்ஸி 4-0 என்ற கணக்கில் கஜகஸ்தானின் அல்டின் ஷகாயேவாவை தோற்கடித்து தங்க பதக்கம் வென்றார்.
62 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் பாக்ய 4-0 என்ற கணக்கில் கஜகஸ்தானின் டைன்ஸ் துபேக்கையும், 65 கிலோ எடைப் பிரிவில் புல்கிட் 4-1 என்ற கணக்கில் மங்கோலியாவின் நார்காஜித் நியாம்சுரேனையும் வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார். 72 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் அம்ருதா 2-4 என்ற கணக்கில் மங்கோலியாவின் ஒட்கெரல் எர்தீன்-ஒசிரிடம் தோல்வி அடைந்து வெள்ளிப் பதக்கம் பெற்றார்.















