ஆந்திராவில் 4 விமான நிலையங்களில் ஸ்ரீவாணி தரிசன டிக்கெட் விரைவில் விநியோகம்

0
22

திருப்​பதி ஏழு​மலை​யானை தரிசனம் செய்ய வசதியாக ஆந்​தி​ரா​வில் 4 விமான நிலை​யங்​களி​ல் ஸ்ரீ​வாணி அறக்​கட்​டளை டிக்​கெட்​டு​கள் விற்​பனை விரை​வில் தொடங்க உள்ளது.

திருப்​பதி ஏழு​மலை​யானை ​வாணி அறக்​கட்​டளை மூலம் ரூ.10,500 கட்​ட​ணம் செலுத்தி தரிசிப்​ப​தற்கு பக்​தர்​கள் அலைமோதுகின்​றனர். ஒரு நபர் ரூ.10,000 நன்​கொடை வழங்கியும், விஐபி பிரேக் தரிசனத்​திற்கு கூடு​தலாக ரூ.500 செலுத்தி​யும் இந்த தரிசனத்தை பெற முடி​யும். ஒய்​எஸ்​ஆர் காங்கிரஸ் ஆட்சியில் இது அறி​முகப்​படுத்​தப்​பட்​டது. இதன் முலம் வரும் நிதி​யை, எஸ்​டி, எஸ்​சி, பிசி பிரி​வினர் வசிக்​கும் பகு​தி​யில் இந்து தர்ம பிர​சா​ரத் துறை​யின் கீழ், இந்து கோயில்​களை கட்ட தீர்​மானிக்​கப்​பட்​டது.

அதன்​படி தற்​போது 5 ஆயிரத்​திற்​கும் அதி​க​மான கோயில்​கள் கட்டப்​பட்டு வரு​கிறது. இதற்கு பக்​தர்​களிடையே பெரும் ஆதரவு இருப்​ப​தால், திரு​மலை​யில் 800 ஆன்​லைன் டிக்​கெட்​டு​களும், திருப்​பதி விமான நிலை​யத்​தில் தின​மும் 200 டிக்​கெட்​டு​களும் வழங்​கப்​படு​கின்​றன. இதில் 800 டிக்​கெட்​டு​கள் அன்​றைய தினம் காலை 9 மணிக்கு ஆன்​லைனில் வழங்​கப்​பட்​டால், அதே​நாள் மாலை 4.30 மணிக்கு சுவாமி தரிசனத்​திற்கு அனுப்பபடுகின்றனர்.

இதனால் ஒரே நாளில் சுவாமியை தரிசித்து விடலாம் எனும் ஆசையில் பலர் இந்த டிக்​கெட்​டு​களை பதிவு செய்ய முன் வருகின்​றனர். இதனால் இதற்​கும் கடும் கிராக்கி ஏற்​பட்​டுள்​ளது. இந்த டிக்​கெட்​டு​களும் ஆன்​லைனில் வெறும் 2 நிமிடங்​களில் தீர்ந்து விடு​கின்​றன. மேலும் 3 மாதங்​களுக்கு முன்​னரே தின​மும் 500 டிக்​கெட்​டு​கள் வீதம் ஆன்​லைனில் முன்​ப​திவு வசதி​யும் உண்டு. இது​வும் உடனுக்கு உடன் தீர்ந்து போய் விடு​கிறது.

இதனால், திருப்​பதி விமானம் நிலை​யத்​தில் வழங்​கப்​பட்டு வந்த தினசரி 200 டிக்​கெட்​டு​களை பிரித்​து, திருப்​ப​தி, விஜய​வா​டா, விசாகப்​பட்​டினம், ராஜ​முந்​திரி விமான நிலை​யங்​களில் தலா 50 டிக்​கெட்​டு​கள் தினசரி வழங்க தேவஸ்​தானம் ஆலோ​சித்து வருகிறது. இத்​திட்​டம் விரை​வில் அமல்​படுத்​தப்​படலாம்​ என கூறப்படுகிறது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here