உலகக் கோப்பை வில்வித்தை இறுதிப் போட்டியில் இந்திய அணி

0
23

உலகக் கோப்பை வில்வித்தை ஸ்டேஜ் 2 போட்டி சீனா​வின் ஷாங்​காய் நகரில் நடை​பெற்று வரு​கிறது. இதில் மகளிருக்​கான ரீகர்வ் அணி​கள் பிரிவு அரை இறு​தி​யில் இந்​தி​யா, 10 முறை ஒலிம்​பிக் சாம்​பிய​னான தென் கொரியா அணியை எதிர்த்து விளை​யாடியது.

இதில் தீபிகா குமாரி, அங்​கிதா பகத், குங்​கும் மோஹோர் ஆகியோரை உள்​ளடக்​கிய இந்​திய மகளிர் அணி 5-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று இறு​திப் போட்​டிக்கு முன்​னேறியது. இதன் மூலம் குறைந்​த​பட்​சம் வெள்​ளிப் பதக்​கம் வெல்​வதை இந்திய மகளிர் அணி உறுதி செய்​தது.

நாளை (9-ம் தேதி) நடை​பெறும் இறு​திப் போட்​டி​யில் தரவரிசையில் 2-வது இடத்​தில் உள்ள சீனா​வுடன் பலப்​பரீட்சை நடத்​துகிறது இந்​திய அணி. அதேவேளை​யில் ஆடவர் ரீகர்வ் அணிகள் பிரிவு அரை இறு​தி​யில் தருண் தீப் ராய், தீரஜ் பொம்​ப​தேவ​ரா, யாஷ்தீப் போகே ஆகியோரை உள்​ளடக்​கிய இந்​திய அணி 2-6 என்ற கணக்​கில் வங்​கதேச அணி​யிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்​தது. கலப்பு அணி​கள் பிரிவு 2-வது சுற்​றில் தீரஜ் பொம்​ப​தேவ​ரா, அங்​கிதா பகத் ஆகியோரை உள்​ளடக்​கிய இந்திய அணி 2-வது சுற்​றில் பிரேசில் ஜோடி​யிடம்​ தோல்​வி அடைந்​தது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here