விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படத்துக்கு தணிக்கை சான்று கிடைப்பதில் ஏற்பட்ட சிக்கலால் மறு ஆய்வுக்காக தணிக்கை வாரியத்திடம் நிலுவையில் உள்ளது.
இப்படம் கடந்த ஏப்ரல் 9-ம் தேதி இணைய தளங்களில் சட்டவிரோதமாக வெளியானது. இது தொடர்பாக சென்னை சைபர் க்ரைம் போலீஸார் 9 பேரை கைது செய்துள்ளனர். தேர்தல் முடிவுகளுக்கு பிறகு தணிக்கை சான்றிதழ் கிடைத்தால், மே 7-ம் தேதி இப்படம் வெளியாக வாய்ப்பிருக்கிறது.
இதற்கிடையே இந்தப் படத்தின் டிஜிட்டல் உரிமையை பிரைம் வீடியோ ரூ.120 கோடிக்கு வாங்கியிருந்தது என்றும் படம் இணையத்தில் கசிந்ததால் ஒப்பந்தத்தை அந்நிறுவனம் ரத்து செய்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் புதிய நிறுவனங்கள், இதன் டிஜிட்டல் உரிமையை மிகக் குறைந்த விலையையே, சுமார் ரூ.50 கோடிக்கு கேட்பதாகவும் இதனால் ஜனநாயகன் இணையத்தில் கசிந்ததால் ரூ.70 கோடி நஷ்டம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.













