தோல்வி​களுக்கு முற்​றுப்​புள்ளி வைக்​குமா கொல்கத்தா நைட் ரைடர்ஸ்? – குஜராத் டைட்டன்ஸ் உடன் இன்று பலப்​பரீட்சை

0
26

ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு அகம​தா​பாத்​தில் உள்ள நரேந்​திர மோடி மைதானத்​தில் நடை​பெறும் ஆட்​டத்​தில் குஜராத் டைட்​டன்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணி​கள் மோதுகின்றன.

அஜிங்க்ய ரஹானே தலை​மையி​லான கொல்​கத்தா நைட் ரைடர்ஸ் அணி நடப்பு சீசனில் வெற்​றிக்​காக ஏங்​கும் நிலைக்கு தள்​ளப்​பட்​டுள்​ளது. 5 ஆட்​டங்​களில் விளை​யாடி உள்ள அந்த அணி 4 தோல்வி​களை பதிவு செய்​துள்​ளது. ஒரு ஆட்​டம் மழை காரண​மாக ரத்து ஆகி​யிருந்​தது. இதனால் அந்த அணி ஒரு புள்​ளி​யுடன் 10 அணி​கள் கலந்​து​கொண்​டுள்ள தொடரில் கடைசி இடத்​தில் உள்​ளது. அந்த அணி​யின் பந்​து​வீச்சு பலம் இழந்து காணப்​படு​கிறது.

தொடர் தொடங்​கு​வதற்கு முன்பே ஹர்​ஷித் ராணா, ஆகாஷ் தீப் ஆகியோர் காயம் காரண​மாக வில​கினர். சில பிரச்​சினை​களால் பிசிசிஐ-​யின் உத்​தர​வின்​படி முஷ்​டாபிஷுர் ரஹ்​மானும் அணியி​லிருந்து விடுவிக்​கப்​பட்​டிருந்​தார். அவருக்கு பதிலாக அணி​யில் சேர்க்​கப்​பட்ட ஜிம்​பாப்​வேயை சேர்ந்த பிளெஸ்​ஸிங் முசா​ர​பானி​யிடம் இருந்து எதிர்​பார்த்த அளவி​லான செயல்​திறன் வெளிப்​பட​வில்​லை.

அனுபவம் வாய்ந்த சுழற்​பந்து வீச்​சாளர்​களான சுனில் நரேன், வருண் சக்​ர​வர்த்தி ஆகியோர் ஃபார்​மில் இல்​லாதது கொல்​கத்தா அணி​யின் சுமையை இரட்​டிப்​பாக்கி உள்​ளது. சுனில் நரேன் நடப்பு தொடரில் ரன் குவிப்பை கட்​டுப்​படுத்​தி​னாலும் விக்​கெட்​கள் வீழ்த்த சிரமப்​பட்டு வரு​கிறார். இது​வரை அவர், 3 விக்கெட்​கள் மட்​டுமே கைப்​பற்​றி​யுள்​ளார். அதேவேளை​யில் வருண் சக்​ர​வர்த்தி இன்​னும் விக்​கெட் வேட்​டையை தொடங்​க​வில்​லை.

இது ஒரு​புறம் இருக்க மைதானத்​துக்கு உள்​ளே​யும் வெளி​யே​யும் எடுக்​கப்​பட்ட சில முடிவு​களால் கொல்​கத்தா அணி​யின் பிரச்​சினை​கள் மேலும் அதி​கரித்​துள்​ளன. டிம் ஷெய்​பர்ட், ரச்​சின் ரவீந்​திரா போன்ற வீரர்​களை விளை​யாடும் லெவனில் சேர்க்​காமல் புறக்​கணித்து வரு​வது அனை​வரை​யும் வியப்​பில் ஆழ்த்​தி​யுள்​ளது. அதே​போல், டாஸ் வென்ற பிறகு அவர்​கள் எடுத்த முடிவு​களும் குழப்​பம் விளை​விப்​ப​தாகவே உள்​ளன.

பஞ்​சாப் கிங்ஸ் அணிக்கு எதி​ராக மழை​யால் பாதிக்​கப்​பட்ட போட்​டி​யில், முதலில் பேட்​டிங் செய்ய ரஹானே எடுத்த முடிவு அனை​வரை​யும் ஆச்​சரியப்​படுத்​தி​யது. அதே​போல், சென்னை சூப்​பர் கிங்ஸ் அணிக்கு எதி​ரான போட்​டி​யிலும் சில தவறான முடிவுகளை ரஹானே எடுத்திருந்தார். முன்​ன​தாக மும்பை இந்​தி​யன்ஸ் அணிக்கு எதி​ரான முதல் போட்​டி​யில் 220 ரன்​களைக் குவித்தும், அதனைத் தக்​க வைக்க முடி​யாமல் தோற்​றது அந்த அணி​யின் மோச​மான தொடக்​கத்​திற்கு அச்சாரமிட்டது.

அதனைத் தொடர்ந்​து, சொந்த மண்​ணிலேயே சன்​ரைசர்ஸ் ஹைத​ரா​பாத் அணி​யிடம் 65 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் சந்​தித்த படுதோல்​வி, அணி​யின் வீழ்ச்​சியை மேலும் தீவிரப்​படுத்​தி​யது. ஒட்​டுமொத்​த​மாக கொல்​கத்தா அணி சரி​யான திசை​யில் பயணிக்​காமலும் தெளி​வான இலக்கு இல்​லாமலும் காட்​சி​யளிக்​கிறது.

ஆந்த்ரே ரஸ்​ஸலுக்கு மாற்​றாக, சுமார் ரூ.25.20 கோடிக்கு ஏலம் எடுக்​கப்​பட்ட ஆஸ்​திரேலிய ஆல்​ர​வுண்​ட​ரான கேமரூன் கிரீன் தடு​மாறி வரு​கிறார். இது​வரை விளை​யாடிய 5 ஆட்​டங்​களி​லும் வெறும் 56 ரன்​கள் மட்​டுமே எடுத்துள்​ளார். அவர், பந்​து​வீசுவதற்கு அனு​மதி கிடைத்த பிறகும் பந்​து​வீச்​சில் பெரிய அளவில் தாக்​கத்தை ஏற்​படுத்​த​வில்​லை. அணி​யின் பேட்​டிங் வரிசை​யும் மிக​வும் குழப்​ப​மான​தாகவே காட்​சி​யளிக்​கிறது.

சென்னை சூப்​பர் கிங்ஸ் அணிக்கு எதி​ரான 193 ரன்​கள் என்ற இலக்கை துரத்​திய போது சுனில் நரேன் தொடக்க வீர​ராக களமிறக்​கப்​பட்டார். அதே​நேரம், பவர்​பிளே ஓவர்​களில் மிகச்​சிறந்த ஸ்டிரைக்​ ரேட் வைத்​துள்ள ரஹானே, 3-வது இடத்​தில் களமிறங்​கு​வதற்கு தள்​ளப்​பட்​டார். இந்த இரண்டு மாற்​றங்​களுமே பலன் அளிக்​க​வில்​லை. இறு​தி​யில், சிஎஸ்​கே-வுக்கு எதி​ராக கொல்​கத்தா அணி​யால் 7 விக்​கெட் இழப்​பிற்கு 160 ரன்​கள் மட்​டுமே எடுக்க முடிந்தது.

மேலும், மணிஷ் பாண்​டே, ராகுல் திரி​பா​தி, சர்​தக் ரஞ்​சன் போன்ற உள்​நாட்​டுத் திறமை வாய்ந்த வீரர்​கள் இன்​னும் பயன்​ படுத்​தப்​ப​டா​மல் பெஞ்​சிலேயே அமர வைக்​கப்​பட்​டிருக்​கிறார்​கள். கொல்​கத்தா அணி மீண்​டும் வெற்​றிப் பாதைக்​குத் திரும்ப வேண்​டு​மானல் ஏதேனும் அதிச​யம் நிகழ வேண்​டும் என்ற சூழ்​நிலையே நில​வு​கிறது.

எனினும் வெற்​றிக்​கான வழிகளை கண்​டறிய அந்த அணி தங்​களது ஆட்ட யுக்​தி​களை சரிசெய்ய வேண்​டும். இந்த இக்​கட்​டான சூழலில் கொல்​கத்தா அணி கடந்த 2015-ம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணி நிகழ்த்​திய சாதனையை ஒரு பாட​மாக எடுத்​துக்​கொள்​ளலாம். அந்த சீசனில் மும்பை அணி முதல் ஆறு போட்​டிகளில் ஐந்​தில் தோல்​வியடைந்​திருந்​தது. ஆனால் அதன்​பின்​னர் எழுச்சி கண்டு கோப்​பையை வென்​றது.

அத்​தகைய ஒரு மேஜிக்கை நிகழ்த்த வேண்​டிய கட்​டா​யத்​தில் கொல்​கத்தா அணி உள்​ளது. ஷுப்​மன் கில் தலை​மையி​லான குஜ​ராத் டைட்​டன்ஸ் அணி 4 ஆட்​டங்​களில் விளை​யாடி 2 வெற்​றி, 2 தோல்வி​களை பதிவு செய்​துள்​ளது. அந்த அணி நடப்பு சீசனில் சொந்த மைதானத்​தில் 2-வது முறை​யாக விளை​யாடு​கிறது.

கடைசி​யாக இங்கு கடந்த 4-ம் தேதி நடை​பெற்ற ஆட்​டத்​தில் ராஜஸ்​தான் ராயல்ஸ் அணி​யிடம் 6 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் தோல்வி கண்​டிருந்​தது. ஆனால் அதன் பின்​னர் டெல்​லி, லக்​னோ​வில் நடை​பெற்ற ஆட்​டங்​களில் குஜ​ராத் அணி வெற்றி கண்​டிருந்​தது.

பேட்​டிங்​கில் ஷுப்​மன் கில், ஜாஸ் பட்​லர் பார்​முக்கு திரும்பி இருப்​பது அணிக்கு பலம் சேர்க்​கக்​கூடும். வேகப்​பந்து வீச்​சில் பிரசித் கிருஷ்ணா நடு ஓவர் மற்​றும் இறு​திக்​கட்ட ஓவர்​களில் பலம் சேர்த்து வரு​கிறார். ரஷித் கானும் பார்​முக்கு திரும்பி இருப்​பது அணி​யின் நம்​பிக்​கையை அதிகரித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here