ரூ.2 கோடி நஷ்டஈடு கேட்டு நடிகை ஹன்சிகா வழக்கு

0
25

தமிழ், தெலுங்​கில் நடித்து வருபவர் ஹன்சிகா மோத்வானி. இவருடைய சகோ​தரர் பிர​சாந்​துக்​கும் சின்னத் திரை நடிகை முஸ்​கன் நான்ஸி ஜேம்ஸ் என்பவருக்கும் கடந்த 2020-ம் ஆண்டு திரு​மணம் நடந்​தது. கருத்​து​வேறுபாடு காரண​மாக இரு​வரும் 2022-ல் பிரிந்தனர்.

இந்​நிலை​யில் மும்பை அம்​போலி போலீஸ் ஸ்டேஷனில் ஹன்​சிகா குடும்​பத்​தின் மீது முஸ்​கன் நான்ஸி குடும்ப வன்​முறை புகார் அளித்​தார். அதில், “ஹன்​சிகா​வும் அவரது தாயார் மோனோ​வும் என் திருமண வாழ்க்​கை​யில் தலை​யிட்டு எனக்​கும் என் கணவருக்​கும் பிரச்​சினையை ஏற்​படுத்​தினர். அவர்​களால் தாக்​குதலுக்கு உள்​ளானேன்.

இதன் காரண​மாக, முகத்​தின் ஒரு பக்க தசைகளில் செயலிழப்பை ஏற்​படுத்​தும் நோயால் பாதிக்​கப்​பட்​டேன்” என்று அவர் குற்​றம் சாட்​டி​யிருந்தார். இதையடுத்து ஹன்சிகா உட்பட 3 பேர் மீதும் வழக்​குப் பதிவு செய்யப்பட்டது. தன் மீதான இப்​பு​காரை ரத்து செய்​யக்​கோரி ஹன்​சிகா மும்பை உயர்​நீ​தி​மன்​றத்தை நாடியிருந்தார்.

இதற்​கிடையே, தொழில​திபர் சோஹைல் கதுரியாவுடனான தனது விவாகரத்​தைக் கடந்த மார்ச் மாதம் ஹன்​சிகா உறுதி செய்​தார். இந்​நிலை​யில் மும்பை திண்​டோஷி செஷன்ஸ் நீதி​மன்​றத்​தில் ரூ.2 கோடி நஷ்டஈடு கேட்டு முஸ்​கன் நான்ஸி மீது ஹன்​சிகா வழக்கு தொடர்ந்​துள்​ளார். அவர் தாக்​கல் செய்​துள்ள மனு​வில், ‘எனது அண்​ணனுக்​கும் நான்​சிக்​கும் திரு​மணம் நடந்​த​போது, நான்​சி​யிடம் ரூ.27 லட்​சம் கடனாகக் கொடுத்​தேன்.

அதைத் திருப்​பித் தராமல் ஏமாற்​று​வதற்​காக, என் மீது பொய்​யான புகார்​களை சமூக வலை​தளங்​களில் நான்சி கூறி வரு​கிறார். என் மீது சுமத்​தப்​பட்ட குற்​றச்​சாட்​டு​கள் அனைத்​தும் ஆதா​ரமற்​றவை. எனக்கு ஏற்​பட்ட மன உளைச்சலுக்​கும் நற்​பெயருக்​குக் களங்​கம் விளைவித்ததற்​கும் அவர் ரூ. 2 கோடி நஷ்டஈடு வழங்க வேண்​டும். பகிரங்​கமாக மன்​னிப்பு கேட்​பதுடன், இனி எனக்கு எதி​ராக எந்த கருத்​தை​யும் பேச தடைவி​திக்​க வேண்​டும்​” என்று கூறப்​பட்​டுள்​ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here