சென்னை கால்பந்து சங்கம் சார்பில் சீனியர் டிவிஷன் லீக் 2025-26 போட்டி செனாய் நகரில் உள்ள பாவேந்தர் பாரதிதாசன் கால்பந்து மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் தமிழக காவல்துறை, டிபிஒய்சி கீழ்ப்பாக்கம் அணிகள் மோதின.
இந்த ஆட்டத்தில் தமிழக காவல்துறை அணி 1-0 என்ற கோல் கணக்கில் டிபிஒய்சி கீழ்ப்பாக்கம் அணியை வீழ்த்தியது. தமிழக காவல்துறை அணியின் வீரர் விஜயன் 4-வது நிமிடத்தில் ஒரு கோலடித்து அணிக்கு வெற்றி தேடித்தந்தார். டிபிஒய்சி கீழ்ப்பாக்கம் அணியின் தினேஷ் சிறந்த வீரருக்கான விருதை கைப்பற்றினார்.














