தென் ஆப்​பிரிக்கா​வுக்கு எதிரான 2-வது டி20 போட்டி​யில் நியூஸிலாந்து அபார வெற்றி

0
22

தென் ஆப்​பிரிக்கா​வுக்கு எதி​ரான 2-வது டி20 கிரிக்​கெட் போட்​டி​யில் நியூஸிலாந்து அணி 68 ரன்​கள் வித்தி​யாசத்​தில் அபார வெற்​றியைப் பெற்​றது. தென் ஆப்பிரிக்க கிரிக்​கெட் அணி, நியூஸிலாந்​தில் சுற்​றுப்​பயணம் செய்து 5 போட்​டிகள் கொண்ட டி20 தொடரில் விளை​யாடி வரு​கிறது.

முதல் போட்​டி​யில் தென் ஆப்​பிரிக்க அணி வெற்றி பெற்ற நிலையில் தொடரில் அந்த அணி 1-0 என்ற கணக்​கில் முன்னிலை​யில் இருந்​தது. இந்​நிலை​யில் 2-வது டி20 கிரிக்கெட் போட்டி ஹாமில்​டன் மைதானத்​தில் நேற்று நடை​பெற்​றது. முதலில் விளை​யாடிய நியூஸிலாந்து அணி 20 ஓவர்​களில் 6 விக்​கெட் இழப்​புக்கு 175 ரன்​கள் குவித்​தது.

அணி​யின் தொடக்க ஆட்​டக்​காரர் டெவன் கான்வே 49 பந்துகளில் 5 பவுண்​டரி​கள், 2 சிக்​ஸர்​களு​டன் 60 ரன்​கள் குவித்தார், டாம் லேதம் 11, டிம் ராபின்​சன் 1, நிக்கி கெல்லி 21, மிட்​செல் சான்ட்​னர் 20, ஜேம்ஸ் நீஷம் 8, கோல் மெக்​கோன்சி 18, ஜோஷ் கிளார்க்​சன் 26 ரன்​கள் எடுத்​தனர்.

பின்​னர் 176 ரன்​கள் எடுத்​தால் வெற்றி என்ற இலக்​குடன் விளை​யாடிய தென் ஆப்​பிரிக்க அணி 15.3 ஓவர்​களில் 107 ரன்​களுக்கு சுருண்​டது. அந்த அணி​யின் வியான் முல்​டர் 16, கானர் எஸ்​டர்​ஹுய்​சன் 8, டோனி டி ஸோர்ஸி 1, ரூபின் ஹெர்​மான் 19, ஜேச் ஸ்மித் 12, டியான் பாரஸ்​டர் 10, ஜார்ஜ் லிண்டே 33, ஜெரால்டு கோட்ஸி 2 ரன்​கள் எடுத்​தனர்.

இதையடுத்து 68 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் நியூஸிலாந்து வெற்றி பெற்​றது. இதையடுத்து இந்​தத் தொடர் 1-1 என்ற கணக்​கில் சமநிலை​யில் உள்​ளது. நியூஸிலாந்து அணி தரப்​பில் லாக்கி பெர்​குசன், பென் சியர்ஸ் ஆகியோர் தலா 3 விக்​கெட்​களைக் கைப்​பற்​றினர்.

மிட்​செல் சான்ட்​னர் 2 விக்​கெட்​களை​யும், கோல் மெக்​கோன்​சி, ஜேம்​ஸ் நீஷம் ஆகியோர் தலா ஒரு விக்​கெட்​டை​யும் வீழ்த்​தினர். ஆட்​ட​நாயக​னாக டேவன் கான்வே தேர்வு செய்​யப்​பட்​டார்​. இவ்​விரு அணி​களுக்​கு இடையி​லான 3-வது டி20 போட்​டி வரும்​ 20-ம்​ தேதி ஆக்​லாந்​து ஈடன்​ ​பார்​க்​ மை​தானத்​தில்​ நடைபெறவுள்​ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here