அறிமுக இயக்குநர் அசோக் ராம் இயக்கத்தில் முனீஸ்காந்த் நடிக்கும் படத்தை ஜே.பி. சினிமாஸ் சார்பில் ஜெயக்குமார், ப்ரீத்தி தயாரிக்கின்றனர்.
பழமையான கேமரா ஒன்றை மையப்படுத்தி தயாராகும் ஃபேன்டஸி காமெடி படமான இதில், ரெடின் கிங்ஸ்லி, பாலாஜி சக்திவேல், விவேக் பிரசன்னா, கல்கி, ஜென்சன் திவாகர், வினோத் முன்னா, அனன்யா ராவ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
ஸ்ரீதர் சுப்பிரமணி ஒளிப்பதிவு செய்யும் இந்தப்படத்துக்கு ஆனந்த் காசிநாத் இசையமைக்கிறார். இதன் தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது. இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன் கலந்து கொண்டு படக் குழுவினரை வாழ்த்தினார்.
படம் பற்றி அசோக் ராம் கூறும்போது, “ஃபேன்டஸி காமெடி படமான இதற்காக சென்னையில் பிரம்மாண்டமான அரங்கம் அமைத்துள்ளோம். அதில் இப்போது படப்பிடிப்பு நடந்து வருகிறது. அனைவரும் ரசிக்கும்படியான படமாக இது இருக்கும்” என்றார்.














