திருமணத்தை மீறிய உறவு இருப்பதாக மனைவி புகார்: காதல் ஒன்றும் தவறு இல்லை என்கிறார் கேரள அமைச்சர்

0
28

திருமணத்தை மீறிய உறவு இருப்பதாக மனைவி புகார் கூறியதையடுத்து தனக்கு ஒன்றல்ல, 5 ஆயிரம் காதல் உறவு இருப்பதாக கேரள மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.பி. கணேஷ்குமார் கூறியுள்ளார்.

கேரள சட்டப்பேரவைக்கு வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் தேர்தல் நடைபெறவுள்ளது. கொல்லம் மாவட்டம் பதனப்புரம் தொகுதியில் இருந்து 5-வது முறையாக எம்எல்ஏவாக கணேஷ்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் நடிகரும் கூட. 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் கேரள காங்கிரஸ்(பி) கட்சியைச் சேர்ந்தவர். இந்நிலையில் கேரள அமைச்சர் கே.பி.கணேஷ்குமார் மீது அவரது மனைவி ஒரு குற்றச்சாட்டை வைத்துள்ளது கேரள அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. கணேஷ் குமாரின் மனைவி பிந்து மேனன்.

இந்நிலையில் தனது கணவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை பிந்து மேனன் முன்வைத்துள்ளார். இது குறித்து பிந்து மேனன் கூறும்​போது, “எனது கணவர் கணேஷ்கு​மார் திரு​மணத்​தைத் தாண்​டிய கள்ள உறவில் இருக்​கிறார். கடந்த சனிக்​கிழமை எனது கணவரை வீட்​டில் வேறொரு பெண்​ணுடன் கையும் களவு​மாகப் பிடித்​தேன். அப்​போது அமைச்​சரின் உதவி​யாளர்​கள் என்​னைத் தாக்​கி​னார்.

போலீ​ஸாரிடம் புகார் கொடுத்​த​போது, போலீ​ஸாரை கூட வீட்டுக்குள் அனு​ம​திக்க அமைச்​சரின் உதவி​யாளர்​கள் மறுத்தனர். 2014-ல் எங்​களுக்கு திரு​மணம் ஆனதிலிருந்து எங்​கள் வாழ்க்​கை​யில் பிரச்​சினை​கள் நிலவி வந்​தன. இதுதொடர்​பாக கேரள முதல்​வர் பின​ராயி விஜயனின் மகள் வீணா​விடம் கூட புகார் கொடுத்​துள்​ளேன்” என்​றார். இது குறித்து கே.பி.கணேஷ் குமார் செய்​தி​யாளர்​களிடம் கூறும்போது, “தேர்​தல் நெருங்குவதால் இது​போன்ற பல விஷயங்கள் வரும். இதற்கு முன்பும் எனது வீட்​டில் இருந்து பிரச்சினை வந்​துள்​ளது. எனது அரசி​யலைத்​தான் நீங்​கள் பார்க்க வேண்​டும்.

மக்​கள் பிர​தி​நிதி மக்​களுக்கு என்​னவெல்​லாம் செய்​கிறார். அதனால் கேரளா​வுக்கு என்ன நன்மை நடந்​தது என்​ப​தைத்​தான் நீங்​கள் பார்க்க வேண்​டும். என்​னைத் தேர்ந்​தெடுத்த மக்​களுக்கு அது தெரி​யும். கணேஷ் குமாருக்​கும் (எனக்​கு) காதல் உண்​டு. உங்களில் காதலிக்​காதவர்​கள் யாரா வது இருக்​கிறீர்​களா ? காதல் ஒன்​றும் குற்​றம் கிடை​யாது. இவ்​வாறு அவர் தெரிவித்துள்ளார்.

2-வது திரு​மணம்: 2013-ம் ஆண்​டில் அப்​போதைய காங்​கிரஸ் முதல்​வர் உம்​மன் சாண்டி தலை​மையி​லான கேரள அரசிலும் கணேஷ்கு​மார் அமைச்​ச​ராக இருந்​தார். அப்​போது தனது முதல் மனைவி யாமினி தன்​காச்​சியை அடித்து துன்​புறுத்​தி​ய​தாக புகார் எழுந்​தது. இதைத் தொடர்ந்து தனது அமைச்​சர் பதவியை கணேஷ்கு​மார் ராஜி​னாமா செய்​தார் என்​பது குறிப்​பிடத்​தக்​கது. 2014-ல் பிந்து மேனனை, 2-ம் திரு​மணம்​ செய்​துகொண்​டார்​ கணேஷ்கு​மார்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here