‘காளிதாஸ் 2’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

0
27

பரத் நடித்து வரவேற்பைப் பெற்ற திரைப்படம், ‘காளிதாஸ்’. 2019-ம் ஆண்டு வெளியான இதன் அடுத்த பாகம் ‘காளிதாஸ் 2’ என்ற பெயரில் உருவாகியுள்ளது. முதல் பாகத்தை இயக்கிய செந்தில் இதையும் இயக்கியுள்ளார்.

இதில், பரத், புதுமுக நடிகர் அஜய் கார்த்திக், பிரகாஷ் ராஜ், ‘பூவே உனக்காக’ சங்கீதா, கிஷோர், சுரேஷ் மேனன், பவானி, அபர்ணதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஸ்கை பிக்​சர்​ஸ் சார்​பில் ஃபைவ் ஸ்டார் கே.செந்​தில் மற்​றும் டாக்​டர் என். யோகேஸ்​வரன் இணைந்து தயாரித்​துள்​ளனர்.

இப்​படத்​தின் ரிலீஸ் தேதியை படக்​குழு அறி​வித்​துள்​ளது. அதன்​படி ஏப்​.3-ம் தேதி வெளி​யாக இருக்​கிறது. “இது புலனாய்வு த்ரில்லர் படம். முதல் பாகம் ஒரு குடும்பத்தை மையமாகக் கொண்ட கதையாக ஆச்சரியப்படுத்தியது. அதே பாணியில், இதுவும் உணர்ச்சிகரமான அதே நேரம் அதிரடியான களத்தில் த்ரில்லராக உருவாகியுள்ளது.

குடும்ப எமோஷனல் விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறோம். 2 வெவ்வேறு கதைகள் ஒரு இடத்தில் சந்திப்பது போல திரைக்கதை இருக்கும்” என்று இயக்குநர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here