தமிழக அரசின் திரைப்பட, சின்னத்திரை விருதுகள்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்

0
20

தமிழக அரசின் சார்​பில் 2016 முதல் 2022-ம் ஆண்​டு​களுக்​கான திரைப் பட விருதுகள், 2014 முதல் 2022-ம் ஆண்​டு​களுக்​கான சின்​னத்​திரை விருதுகள் மற்​றும் 2015-16-ம் கல்வி ஆண்டு முதல் 2021-22-ம் கல்வி ஆண்​டு​களுக்​கான தமிழ்​நாடு அரசு எம்​ஜிஆர் திரைப்​படம் மற்றும் தொலைக்​காட்சி பயிற்சி நிறுவன மாணவர் விருதுகள் கடந்த மாதம் அறிவிக்​கப்​பட்​டன.

விருது வழங்​கும் விழா சென்னை கலை​வாணர் அரங்​கில் நேற்று மாலை நடை​பெற்​றது. விருதுகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டா​லின் வழங்​கி​னார். நடிகர்​கள் சூர்யா, கார்த்​தி, தனுஷ், விஜய் சேதுப​தி, பார்த்​திபன், விக்ரம் பிரபு உள்​ளிட்​டோரும், நடிகைகள் கீர்த்தி சுரேஷ், அபர்ணா பால​முரளி, சாய்பல்லவி, மஞ்சு வாரியர், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் சிறந்த நடிகர், நடிகைகளுக்​கான விருதுகளைப் பெற்​றனர்.

நகைச்​சுவை நடிகருக்​கான விருதை யோகி​பாபு, கோவை சரளா பெற்​றனர். சிறந்த இசையமைப்​பாள​ருக்​கான விருது ஏ.ஆர்​.ரஹ்​மான், சந்​தோஷ் நாராயணன், ஹிப்​ஹாப் ஆதி, சாம் சி.எஸ். ஆகியோ​ருக்கு வழங்​கப்​பட்​டது. பெண்​களைப் பற்றி உயர்​வாக சித்​தரிக்​கும் ‘கனா’ படத்துக்​கான விருதை, அதன் தயாரிப்​பாள​ரான சிவகார்த்தி​கேயன் பெற்​றுக் கொண்​டார்.

அவரது மகள் ஆராதனா சிவ​கார்த்​தி​கேயன், அந்த படத்துக்​காக சிறந்த பின்​னணி பாடகிக்​கான விருதைப் பெற்​றார். மாநகரம், அறம், பரியேறும் பெரு​மாள், அசுரன், கூழாங்​கல், ஜெய் பீம், கார்கி உள்​ளிட்ட படங்​கள் விருதுகளை வென்றன. சின்​னத்​திரை பிரி​வில் அழகி, ரோஜா, வாணி ராணி, எதிர்​நீச்​சல் தொடர்​களுக்கு சிறந்த நெடுந்​தொடருக்​கான விருது கிடைத்​தது.

சின்​னத்​திரை கதா​நாயகன், கதா​நாயகி, தொழில்​நுட்​பக் கலைஞர்​களுக்​கும் விருதுகள் வழங்​கப்​பட்​டன. சிறந்த நெடுந்​தொடர்​களுக்​கான வாழ்​நாள் சாதனை​யாளர் விருது கே.ஆர்​.​விஜ​யா, எஸ்​.​வி.சேகர், எஸ்​.​ராஜசேகரன் உள்ளிட்​டோருக்கு வழங்​கப்​பட்​டது. மொத்​தம் 223 திரைப்படக் கலைஞர்​கள், 180 சின்​னத்​திரைக் கலைஞர்கள், 30 மாணவர்​கள் என 433 பேர் விருதுகளைப் பெற்​றனர்.

விழா​வில் உதயநிதி ஸ்டாலின் பேசி​ய​தாவது: நானும் உங்களில் ஒரு​வ​னாக, இந்​தத் துறையில் இருந்து வந்​தவன். நீண்ட இடைவெளிக்​குப் பிறகு மீண்​டும் பள்ளி வகுப்பறைக்​குத் திரும்​பிய மாணவனைப் போல உணர்கிறேன். அண்​ணா, கருணாநிதி ஆகிய இரு​வரும் கலைத்​துறை​யில் மிகப்​பெரிய புரட்​சியை ஏற்படுத்தியவர்கள். தமிழ் சினி​மா​வின் போக்​கையே மாற்றிய​வர்​கள்.

நம் முதல்​வரும் திரைத் துறை, சின்​னத்திரை​யில் பணியாற்​றிய அனுபவம் கொண்​ட​வர். இன்று தொழில்நுட்ப ரீதி​யாக​வும், கதைக் களத்​தி​லும் நாட்​டுக்கே ஒரு ‘ட்​ரெண்ட் செட்​ட​ராக’ தமிழகம் விளங்​கு​வதற்கு இந்த அடித்​தளமே காரணம். இவ்​வாறு அவர் பேசி​னார்.

அமைச்​சர்​கள் மு.பெ.​சாமி​நாதன், சேகர்​பாபு, கயல்​விழி, தமிழ் வளர்ச்​சி, செய்​தித் துறை செயலர் வே.​ராஜா​ராமன், இயக்​குநர் இரா.​வைத்​தி​நாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்​டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here