சுகா இயக்​கும் ‘சைலப்பன் சைக்கிள் மார்ட்’

0
24

சுகா இயக்​கத்​தில், இசக்கி கார்​வண்​ணன் தனது லட்​சுமி கிரியேஷன்ஸ் சார்​பில் தயாரித்து நடிக்​கும் படத்​துக்கு ‘சைலப்​பன் சைக்​கிள் மார்ட்’ என்று தலைப்பு வைத்துள்ளனர்.

இதில் எம்​.எஸ்​.​பாஸ்​கர், இளவரசு, மூணார் ரமேஷ், இயக்குநர் சுப்​ரமணிய சிவா, பூஜா மோகன்​ராஜ், கதா நந்தி, சுர்​ஜித் கோபி​நாத், வித்யா விஜயகு​மார் உள்​ளிட்ட பலர் முக்​கிய கதா​பாத்​திரங்​களில் நடித்​துள்​ளனர். இளைய​ராஜா இசையமைக்​கிறார். மார்ட்​டின் டான்​ராஜ் ஒளிப்​ப​திவு செய்​துள்​ளார்.

“தென் தமிழகத்​துக் கிராமம், அங்கு வாழும் மனிதர்​கள் மற்​றும் அவர்​களது வாழ்​வில் நிகழும் சம்​பவங்​களை மைய​மாகக் கொண்​டு, நகைச்​சுவை கலந்​து, குடும்பத்துடன் ரசிக்​கும் வகை​யில் இப்​படம் உருவாகியுள்ளது.

எளிய மனிதர்​கள் வாழும் உண்​மை​யான உலகத்தை அசலாகப் பிர​திபலிக்​கும் படைப்​பாக இது இருக்​கும்” என படக்​குழு தெரி​வித்​துள்​ளது. தற்​போது இறு​திக்​கட்டப் பணிகள் நடை​பெற்று வரு​கின்​றன. இத்​திரைப்​படத்​தின் முதல் தோற்​றத்தை இயக்​குநர் வெற்​றி​மாறன் வெளியிட்டுள்​ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here