மெரினாவில் 300 கடைகளுக்கு இன்று குலுக்கல் முறையில் தேர்வு

0
18

சென்னை மெரினா கடற்​கரை​யில் அமைய​வுள்ள 300 கடைகளுக்கு குலுக்​கல் முறை​யில் தேர்வு இன்று (பிப்​.12) நடை​பெறுகிறது.

சென்னை உயர் நீதி​மன்​றத்​தின் உத்​தர​வுப்​படி, சென்னை மெரினா கடற்​கரை​யில் அமைய​வுள்ள 300 கடைகளுக்​கான குலுக்​கல் முறையி​லான தேர்வு சென்னை மாநக​ராட்சி ரிப்​பன் கட்​டிட வளாகத்​தில் இன்று (பிப்​.12) காலை 10.00 மணிக்கு நடை​பெறுகிறது.

ஜம்​மு-​காஷ்மீர் உயர் நீதி​மன்ற முன்​னாள் தலைமை நீதிபதி என்​.​பால் வசந்​தகு​மார் மேற்​பார்​வை​யில் குலுக்​கல் நடை​பெறுகிறது. சென்னை மெரினா கடற்​கரை 4 திட்​டப் பகு​தி​களில் மொத்​த​மாக 300 கடைகள் அமைக்​கப்பட உள்​ளன.

அவற்​றில் உணவு வகைப்​பாட்​டுக்கு 100 வியா​பாரி​களும், அலங்​கார மற்​றும் பரிசுப் பொருட்​கள் வகைப்​பாட்​டுக்கு 100 வியா​பாரி​களும் மற்​றும் பொம்மை பொருட்​கள் வகைப்​பாட்​டுக்கு 100 வியா​பாரி​களும் குலுக்​கல் முறை​யில் தேர்வு செய்​யப்​பட​வுள்​ளனர்.

ஒவ்​வொரு பிரிவுக்​கும் 5 சதவீதம் மாற்​றுத் திற​னாளி​களுக்கு ஒதுக்​கீடு செய்​யப்​படும். அறி​விப்பு பெற்ற வியா​பாரி​கள் அனை​வரும் குறிப்​பிட்ட நேரத்​தில் குலுக்​கல் நடை​பெறும் இடத்​தைப் பார்​வை​யிடலாம்.

மேலும் 4 இடங்​களில் குலுக்​கல் நடை​பெறு​வதை பார்​வை​யிடும் வகை​யில் 4 எல்​.இ.டி. திரைகள் ஏற்​பாடு செய்​யப்​பட்​டுள்​ள​தாக சென்னை மாநக​ராட்சி தரப்​பில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here