மக்கள் அளிக்கும் புகார்கள் மீது விரைந்து நடவடிக்கை: காவல் ஆணையர் உத்தரவு

0
27

பொதுமக்கள் அளிக்​கும் புகார்​கள் மீது போலீ​ஸார் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்​டும் என்று சென்னை காவல் ஆணை​யர் அருண் உத்​தர​விட்​டுள்​ளார்.

சென்​னை​யில் குற்​றச் செயல்களை தடுக்க போலீ​ஸார் பல்​வேறு நடவடிக்​கைகளை எடுத்து வரு​கின்​றனர். அதன் ஒரு பகு​தியாக, ஒவ்​வொரு புதன்​கிழமை​யும் சென்னை காவல் ஆணை​யர் அலு​வல​கத்​தில் பொது​மக்​களிடம் இருந்து புகார் மனுக்​களை காவல் ஆணை​யர் அருண் நேரில் பெற்று வரு​கிறார்.

அந்த வகை​யில், நேற்று 28 பேரிடம் புகார் மனுக்​களை அவர் பெற்​றுக் கொண்டார். பெறப்​பட்ட மனுக்​களில், ‘காவல் நிலை​யங்​களில் ஏற்​கெனவே புகார் கொடுத்​தும் நடவடிக்கை எடுக்​க​வில்​லை’ என்று குறிப்​பிட்​டிருந்த மனுக்​கள் தனி​யாக பிரிக்​கப்​பட்​டு, ‘இந்த மனுக்​கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்​க​வில்​லை?’ என்று சம்​பந்​தப்​பட்ட காவல் நிலை​யத்​திடம் விளக்​கம் கேட்​கப்​பட்​டுள்​ளது.

‘‘​மக்கள் அளிக்​கும் புகார்​கள் ​மீது போலீ​ஸார் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்​டும்.

அதில் சுணக்​கம் காட்​டி​னாலோ, அலைக்​கழித்​தாலோ, லஞ்​சம் வாங்​கி​னாலோ, ஒருதரப்​புக்கு சாதக​மாக செயல்​பட்​டாலோ சம்​பந்​தப்​பட்ட போலீ​ஸார் மீது கடும் நடவடிக்கை எடுக்​கப்​படும்’’ என்​று ஆணை​யர் எச்​சரித்​தார்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here