மாதாந்திர உதவித் தொகையை உயர்த்தி வழங்கக்கோரி 2-வது நாளாக மாற்றுத் திறனாளிகள் போராட்டம்

0
19

மா​தாந்​திர உதவித் தொகையை உயர்த்தி வழங்​கக் கோரி, மாற்​றுத் திற​னாளி​கள் நேற்று 2-வது நாளாக சென்​னை​யில் போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர். சாலை மறியலில் ஈடுபட முயன்ற 450-க்​கும் மேற்​பட்​ட​வர்​களை போலீ​ஸார் கைது செய்​தனர்.

ஆந்​தி​ரா​வில் வழங்​கு​வதை போல, தமிழகத்​தி​லும் மாற்​றுத் திற​னாளி​களுக்கு மாதாந்​திர உதவித் தொகையை உயர்த்தி வழங்​கக்​கோரி, தமிழக அனைத்து வகை மாற்​றுத் திற​னாளி​கள் மற்​றும் பாது​காப்​போர் உரிமை​களுக்​கான சங்​கம் சார்​பில், சென்​னை​யில் உள்ள மாற்​றுத் திற​னாளி​கள் மாநில ஆணை​யரகம் முன்​பாக நேற்​று​முன்​தினம் போராட்டம் நடை​பெற்​றது.

இதைத் தொடர்ந்​து, மறியலில் ஈடுபட முயன்ற மாற்​றுத் திற​னாளி​களை போலீ​ஸார் கைது செய்​தனர். உதவித் தொகையை உயர்த்தி தரக்​கோரி மூன்​றரை ஆண்​டு​களாக போராடி வரு​கிறோம். இது​வரை எங்​கள் கோரிக்​கையை தமிழக அரசு நிறைவேற்​ற​வில்​லை. எங்​களின் ஒற்றை கோரிக்​கையை நிறைவேற்​றும் வரை போராட்டம் தொடரும் என்று மாற்​றுத் திற​னாளி​கள் தெரி​வித்​திருந்​தனர்.

இந்​நிலை​யில், இக்​கோரிக்​கையை வலி​யுறுத்​தி, சென்​னை​யில் உள்ள மாற்​றுத் திற​னாளி​கள் மாநில ஆணை​யரகம் முன்​பு, மாற்​றுத் திற​னாளி​கள் நேற்று 2-வது நாளாக போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர்.

இப்​போ​ராட்​டத்​தில் சங்​கத்​தின் மாநிலத் தலை​வர் தோ.​வில்​சன், மாநில பொதுச் செய​லா​ளர் பா.ஜான்சி ராணி, பொருளாளர் சக்​ர​வர்த்​தி, ஊனமுற்​றோர் உரிமை​களுக்​கான தேசிய மேடை செயல் தலை​வர் எஸ்​.நம்​பு​ராஜன் உள்பட 450-க்​கும் மேற்​பட்​ட​வர்​கள் பங்​கேற்​றனர்.

தொடர்ந்​து, சாலை மறியலில் ஈடுபட முயன்ற அவர்​களை போலீ​ஸார் கைது செய்​தனர். இது​போல, தமிழகத்​தில் 35 மாவட்​டங்​களில் போராட்​டத்​தில் ஈடு​பட்ட 6,500-க்​கும் மேற்​பட்ட மாற்​றுத் திற​னாளி​கள் கைது செய்யப்பட்டனர்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here