அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை​ மகப்பேறு மருத்துவர்கள் இடமாறுதல் கலந்தாய்வை நடத்த கோரிக்கை

0
22

அரசு மருத்​துவக் கல்​லூரி மருத்​து​வ​மனை​களில் பணி​யாற்​றும் மகப்​பேறு மருத்​து​வர்​களுக்கு இடமாறு​தல் கலந்​தாய்வை நடத்த வேண்​டும் என்று அரச மகப்​பேறு, குழந்​தைகள் நல மருத்துவர்கள் கோரிக்கை விடுத்​துள்​ளனர்.

தமிழகத்​தில் உள்ள அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை​களில் மருத்​துவப் பணி​யாளர் தேர்வு வாரி​யம் (எம்​ஆர்​பி) மூலம் சிறப்பு மருத்துவர்கள் பணி நியமனம் செய்​யப்பட உள்​ளனர். அதற்​காக, ஏற்​கெனவே அங்கு பணி​யாற்றி வரும் மருத்​து​வர்​களுக்கு கடந்த வாரம் இடமாறு​தல் கலந்​தாய்வு நடத்​தப்​பட்​டது.

ஆனால், மகப்​பேறு துறை​யில் 57 மருத்​து​வர் பணி​யிடங்​கள் காலி​யாக இருந்​தும் கலந்​தாய்வு நடத்​த​வில்​லை. எனவே, கலந்​தாய்வு நடத்​தக் கோரி, மகப்​பேறு மருத்துவர்கள் கோரிக்கை விடுத்​துள்​ளனர். இது தொடர்​பாக மகப்​பேறு மருத்துவர்கள் கூறிய​தாவது: அரசு மகப்​பேறு மருத்​து​வ​மனை​களில் நீண்​ட​கால​மாக போதிய மருத்துவர்கள் இல்​லாத​போதும், அரசுக்கு தர்​மசங்​கடத்தை ஏற்​படுத்​தாமல், தங்​களைவருத்​திக் கொண்டு பணி​யாற்​றுகின்​றனர்.

பேறு​கால இறப்பு மற்​றும் கைக்​குழந்தை இறப்பு விகிதத்​தை வெகு​வாக குறைத்​த​தில் மகப்​பேறு மருத்துவர்கள் முக்​கியப் பங்கு வகிக்​கின்​றனர். தின​மும் நெடுந்​தொலைவு சென்​று, குடும்​பம், குழந்​தையைவிட்​டு, மிகுந்த சிரமத்​துடன் பணிபுரிவ​தால், மன உளைச்​சலும், உடல் சோர்​வும் ஏற்​படு​கிறது.

புதி​தாக அரசு பணிக்கு வரும் மருத்​து​வர்​களுக்கு கிடைக்​கும் வாய்ப்​பு, ஏற்​கெனவே அரசு பணி​யில் இருக்​கும் மூத்​தவர்​களான எங்​களுக்கு மறுக்​கப்​படு​வது என்ன நியா​யம். எனவே, முதல்​வர், சுகா​தா​ரத் ​துறை அமைச்​சர் உடனடி​யாக தலை​யிட்​டு, மகப்​பேறு மருத்​து​வர்​களுக்கு இடமாறு​தல் கலந்​தாய்வு நடத்த வேண்​டும் என்றனர்.

அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை​களில் பச்​சிளம் குழந்தை பிரி​வில் ‘டிஎம்’ படிப்பு படித்த உயர் சிறப்பு மருத்​து​வர் பணி​யிடங்​களை உரு​வாக்​கு​வதற்​காக, ஏற்​கெனவே இருக்​கும் குழந்​தைகள் நல மருத்​து​வர் பணி​யிடங்​களை குறைப்​ப​தாக அரசு உத்​தர​விட்​டுள்​ளது.

இதுதொடர்​பாக அரசு குழந்​தைகள் நல மருத்துவர்கள் கூறிய​தாவது: ஏற்​கெனவே தமிழகத்​தில் அரசு மருத்​து​வ​மனை​களில் நோயாளி​கள் எண்​ணிக்கை 3 மடங்கு அதி​கரித்​துள்​ளது. மருத்​து​வர் பணி​யிடங்​களை அதி​கரிப்​ப​தற்கு மாறாக குறைப்​பதை எந்த வகை​யிலும் ஏற்​றுக்​கொள்ளமுடி​யாது.

அதி​லும் குறிப்​பாக குழந்​தைகள் நல மருத்​து​வர் பணி​யிடங்​களை குறைப்​பது பின்​னடைவை ஏற்​படுத்​தும். எனவே, குழந்​தைகள் நல மருத்​து​வர்பணி​யிடங்​களை அதி​கரிப்​ப​தோடு, புதி​தாக பச்​சிளம் குழந்​தைகள் நல மருத்​து​வர் பணி​யிடங்​களை உரு​வாக்​கு​வது தான் ஏற்​புடைவ​தாக இருக்​கும். மேலும், குழந்​தைகள் நல மருத்துவர்கள் பணி​யிடங்​களை குறைக்​கும் திட்​டத்தை உடனடி​யாகக் கைவிட வேண்​டும் என்று கூறினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here