ரஜினி – கமல் சேர்ந்து நடிக்​கும் படம்: புரமோ ஷூட் தொடங்கியது

0
27

ரஜினி​காந்​தும் கமல்​ஹாசனும் இணைந்து நடிக்​கும் படத்தை நெல்​சன் திலீப்​கு​மார் இயக்க இருக்​கிறார். ‘ஜெ​யிலர் 2’ படத்​தில் நடித்து முடித்​துள்ள ரஜினி​காந்த், அடுத்து சி.பி.சக்​கர​வர்த்தி இயக்கும் படத்​தில் நடிக்க இருக்​கிறார்.

இப்​படத்தை கமல்​ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்​டர்​நேஷனல் தயாரிக்​கிறது. இதன் படப்​பிடிப்பு ஏப்​ரலில் தொடங்​கும் என்​கிறார்​கள். இதையடுத்து ரஜினி​யும் கமல்​ஹாசனும் இணைந்து ஒரு படத்​தில் நடிக்க இருக்​கின்​றனர். ரஜினி​ காந்​தின் 174-வது படமான இது, கமல்​ஹாசனுக்கு 238-வது படம்.

இது தொடர்​பான தகவல் ஏற்​கெனவே வெளி​யாகி இருந்​தது. ‘சரியான கதை அமைந்​தால் சேர்ந்து நடிப்​போம்’ என்று ரஜினி​காந்​தும் கமல்​ஹாசனும் கூறி​யிருந்​தனர். 40 வருடங்​களுக்​குப் பிறகு இரு​வரும் இணைந்து நடிக்க இருப்​ப​தால் ரசிகர்​கள் மத்தியில் படத்​துக்கு எதிர்​பார்ப்பு ஏற்​பட்​டுள்​ளது. இந்​நிலை​யில், இவர்​கள் இணை​யும் படத்தை நெல்​சன் திலீப்​ கு​மார் இயக்க இருக்​கிறார்.

ராஜீவ் மேனன் ஒளிப்பதிவு செய்கிறார். ரெட் ஜெயண்ட் தயாரிக்கிறது. இந்​தப் படத்​துக்​கான புரமோ வீடியோ படப்​பிடிப்பு சென்னை பிர​சாத் ஸ்டூடியோ​வில் நேற்று தொடங்​கி​யுள்​ளது. இன்றும் இதன் படப்​பிடிப்பு நடக்​கிறது. இதில் இசை அமைப்​பாளர் அனிருத், நெல்​சன் திலீப்​கு​மார் ஆகியோர் பங்கேற்​கிறார்​கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here