மணிப்பூர் முதல்வராக யும்நம் கேம்சந்த் பதவியேற்பு: குகி, நாகா எம்.எல்.ஏ-க்களுக்கு துணை முதல்வர் பதவி

0
20

கூட்​டணி அரசில் சமூக சமநிலை​யைப் பேணும் வித​மாக, குகி சமூகத்​தைச் சேர்ந்த பா.ஜ.க எம்​.எல்.ஏ நெம்சா கிப்​ஜென் மற்​றும் நாகா மக்​கள் முன்​னணி​யைச் சேர்ந்த எம்​.எல்​.ஏ. எல். டிக்ஹோ ஆகியோர் துணை முதல்​வர்​களாகப் பதவி​யேற்​றனர்.

இதில் நெம்சா கிப்​ஜென், டெல்​லி​யில் உள்ள மணிப்​பூர் பவனில் இருந்து காணொலி வாயி​லாகப் பதவி​யேற்​றுக் கொண்​டார்.மேலும், பா.ஜ.க-​வின் கோவிந்​தாஸ் கொந்​தவுஜம், என்​.பி.பி கட்​சி​யின் கே. லோகன் சிங் ஆகியோர் அமைச்​சர்​களாகப் பொறுப்​பேற்​றனர்.

இம்பால்: மணிப்​பூர் மாநிலத்​தின் புதிய முதல்​வ​ராக பாஜகவைச் சேர்ந்த மூத்த தலை​வர் யும்​நம் கேம்​சந்த் சிங் நேற்று பதவி​யேற்​றுக்​கொண்​டார். அவருக்கு ஆளுநர் அஜய் குமார் பல்லா பதவிப்​பிர​மாண​மும், ரகசிய காப்​புப் பிர​மாண​மும் செய்து வைத்​தார்.

மணிப்​பூரில் கடந்த ஆண்டு பிப்​ர​வரி மாதம் முதல் அமலில் இருந்த குடியரசுத் தலை​வர் ஆட்சி வாபஸ் பெறப்​பட்​ட​தாக அறிவிக்​கப்​பட்ட சில மணி நேரங்​களி​லேயே தலைநகர் இம்​பாலில் உள்ள மக்​கள் பவனில் நேற்று மாலை இந்த பதவி​யேற்பு விழா நடை​பெற்​றது.

முன்​ன​தாக, டெல்​லி​யில் உள்ள பாஜக தலை​மையகத்​தில் செவ்​வாய்க்​கிழமை நடை​பெற்ற சட்​டப்​பேர​வைக் கட்​சித் தலை​வர்​கள் கூட்​டத்​தில், கேம்​சந்த் சிங் ஒரு​மன​தாகத் தலை​வ​ராகத் தேர்ந்​தெடுக்​கப்​பட்​டார். இக்​கூட்​டத்​தில் பா.ஜ.க-​வின் 37 எம்​எல்​ஏ-க்​களில் 35 பேர் பங்​கேற்​றனர். கட்​சி​யின் மத்​தி​யப் பார்​வை​யாளர் தருண் சுக், வடகிழக்கு மாநிலப் பொறுப்​பாளர் சம்​பித் பத்ரா உள்​ளிட்​டோரும் இதில் கலந்​து​கொண்​டனர்.

இதனைத் தொடர்ந்​து, தேசிய ஜனநாயகக் கூட்​ட​ணி​யில் இடம்​பெற்​றுள்ள என்​.பி.பி (6 எம்​எல்​ஏ-க்​கள்), என்​.பி.எஃப் (5 எம்​எல்​ஏ-க்​கள்) மற்​றும் மூன்று சுயேச்சை உறுப்​பினர்​களு​ட​னும் ஆலோ​சனை​கள் நடத்​தப்​பட்டு ஆட்சி அமைக்க முடிவு செய்​யப்​பட்​டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here