காஷ்மீர் என்கவுன்ட்டரில் 2 தீவிரவாதிகள் உயிரிழப்பு

0
21

ஜம்மு காஷ்மீரின் உதம்பூர் மாவட்டம் ராம்நகர் அருகே உள்ள வனப்பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக தகவல் கிடைத்தது.

இதையடுத்து பாதுகாப்புப் படையினர் அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு குகையில் இருந்த தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி உள்ளனர். இதையடுத்து, பாதுகாப்புப் படையினர் பதில் தாக்குதல் நடத்தினர்.

இரு தரப்பினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 2 தீவிரவாதிகள் உயிரிழந்தனர். அவர்களிடம் இருந்து ஏகே 47 ரக துப்பாக்கியை கைப்பற்றி உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here