‘அசுரன்’ ‘வாத்தி’ ‘விடுதலை 2’ ஆகிய படங்களில் நடித்த கென் கருணாஸ், ‘யூத்’ என்ற படத்தை இயக்கி நாயகனாக நடித்துள்ளார். இந்தப்படத்தை பார்வதா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் கருப்பையா சி ராம் தயாரித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார்.
பள்ளிக்கூடப் பின்னணியின் உருவாகியுள்ள இந்தப் படத்தின் அறிமுக டீஸர் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் இப்படத்தை மார்ச் மாதம் வெளியிட உள்ளனர். குமரன் பிலிம்ஸ் ராசி சிதம்பரம் இப்படத்தை தமிழில் வெளியிடுகிறார்.



