மத்திய அரசு நிதிப் பகிர்வில் பாகுபாடு காட்டுவதாக கூறி கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நேற்று ஒரு நாள் சத்தியாகிரகப் போராட்டம் நடைபெற்றது.
அப்போது முதல்வர் பினராயி பேசியதாவது: அரசியலமைப்பு சட்டத்தால் உத்தரவாதமளிக்கப்பட்ட உரிமைகளைப் பாதுகாக்க ஒரு மாநிலம் அசாதாரண போராட்டத்தில் ஈடுபட வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இது இந்நில மக்கள் உயிர் வாழ்வதற்கான போராட்டம். அனைத்து அதிகாரங்களும் எங்களின் கைகளில் தான் உள்ளது என்று கூறி மத்திய அரசு நமது உரிமைகளை தன்னிச்சையாகப் பறிக்கும் செயலில் ஈடுபட்டுள்ளது.
அந்த உரிமைகளை பாதுகாக்கவே இந்த சத்தியாகிரகப் போராட்டம். மாநிலத்தின் முன்னேற்றத்தைத் தடுப்பதற்காக மத்திய அரசு வேண்டும் என்றே பல்வேறு தடைகளை உருவாக்கி வருகிறது. இவ்வாறு பினராயி தெரிவித்தார்.



