சபரிமலை வழக்கில் நடுநிலை அமித் ஷா வலியுறுத்தல்

0
17

கேரளா​வில் நடை​பெற்ற உள்​ளாட்சி தேர்​தலில் வெற்றி பெற்ற பாஜக பிர​தி​நி​தி​களை திரு​வனந்​த​புரத்​தில் நடை​பெற்ற கூட்​டத்​தில் மத்திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா நேற்று சந்​தித்​தார்.

கேரளா​வில் நடை​பெறவுள்ள சட்​டப்​பேரவை தேர்​தலில் பாஜக மேற்​கொள்ள வேண்​டிய திட்​டங்​களை​யும் அவர் தொடங்கி வைத்​தார். இந்​நிகழ்ச்​சி​யில் அமித் ஷா பேசுகையில், “கேரள மக்களின் நம்​பிக்​கையை பாஜக​வால் மட்​டுமே பாது​காக்க முடி​யும். சபரிமலை தங்​கம் திருடு போன வழக்​கின் எப்​ஐஆர்-ஐ பார்த்தேன். குற்​ற​வாளி​களை பாது​காக்​கும் நோக்​கில் எப்​ஐஆர் போடப்பட்​டுள்​ளது.

இதில் காங்​கிரஸ் தலை​வர்​களும் சம்​பந்​தப்​பட்​டுள்​ளனர். எனவே, இந்த வழக்​கின் விசா​ரணை​யை, நடுநிலை​யான விசா​ரணை அமைப்​பிடம் கேரள முதல்​வர் ஒப்​படைக்க வேண்​டும் என நான் கோரிக்கை விடுக்​கிறேன்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here