சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் கடும் குளிரால் மக்கள் பாதிப்பு

0
23

சென்னை உள்​ளிட்ட வட மாவட்​டங்​களில் நில​வும் கடும் குளி​ரால் மக்கள் பாதிப்​புக்​கு உள்ளாகினர். இயல்​புக்கு மாறான வானிலை காரண​மாக கடும் குளிர் நில​வுவ​தாக இந்​திய வானிலை ஆய்வு மையத்​தின் தென் மண்டல தலை​வர் பி.அ​முதா தெரி​வித்​துள்​ளார்.

கடந்த சில தினங்​களாக சென்​னை, வேலூர், திருப்​பத்​தூர் உள்​ளிட்ட வட மாவட்​டங்​களில் கடும் குளிர் நிலவி வரு​கிறது. பொதுமக்கள் ஸ்வெட்​டர், மஃப்​ளர் சகித​மாக காலை, மாலை வேளை​களில் வலம் வரு​கின்​றனர்.

விடு​முறை தினத்​தில்​கூட குழந்​தைகள் அதி​கம் வெளி​யில் விளை​யாடு​வதை பார்க்க முடிய​வில்​லை. இருசக்கர வானங்​களில் செல்​லும்​போது, குளிர் நடுங்​கச் செய்​கிறது. சென்​னை, புறநகர் பகு​தி​கள் ஊட்​டி, கொடைக்​கானல் போன்று மாறியது.

மெரினா கடற்​கரைக்கு மாலை நேரங்​களில் ஸ்வெட்​டர் அணிந்​து​தான் மக்கள் வரு​கின்​றனர். வீடு​களில் தரை ஐஸ்​கட்​டி​போல ஜில் என இருக்​கிறது. இந்த கடும் குளி​ரால் இரு​மல், காய்ச்​சல் உள்​ளிட்ட பாதிப்​பு​களும் ஏற்​படு​கின்​றன.

இது​போன்ற கடும் குளிர் நில​வுவதற்​கான காரணம் குறித்து இந்​திய வானிலை ஆய்வு மையத்​தின் தென் மண்டல தலை​வர் பி.அ​மு​தா கூறிய​தாவது: கடந்த 1891 முதல் 2026 வரை ஜனவரி மாதத்​தில் 21 முறை தான் காற்​றழுத்த தாழ்வு மண்​டலங்​கள் உரு​வாகி​யுள்​ளன.

இந்த ஆண்டு ஜனவரி​யில் இலங்கை அருகே காற்​றழுத்த தாழ்வு மண்​டலம் வலுப்​பெற்​றது. இது வளிமண்டல கீழடுக்கு சுழற்​சி​யாக மன்​னார் வளை​குடா அருகே நீடித்து வரு​கிறது. ஏற்​கெனவே வட மாநிலங்​களில் குளிர் அலை​யின் தாக்​கம் உள்​ளது.

மேலும், வளிமண்டல மேலடுக்​கு​களில் காற்​றழுத்த தாழ்வு மண்​டலத்​தின் தாக்​கம் காரண​மாக, வட மாநிலத்​தில் நில​வும் குளிர் காற்று ஈர்க்​கப்​பட்டு வட தமிழகம் நோக்கி வரு​கிறது.

தெற்கு திசை​யில் இருந்​தும் குளிர் காற்று வட தமிழகம் நோக்கி வரு​கிறது. கடந்த 4 நாட்​களுக்கு மேலாக சூரிய ஒளியே வராத நிலை​யில், நிலத்​திலிருந்து வெளி​யேறும் வெப்​பம் தடைபட்​டு, பூமி​யும் குளிர்ச்சி அடைந்​துள்​ளது.

ரஷ்யா வழி​யாக சைபீரிய குளிர் அலை​யின் தாக்​க​மும் தமிழகம் நோக்கி வரு​கிறது. இது​போன்ற பல்​வேறு காரணங்​களால் சென்னை உள்​ளிட்ட வட தமிழக பகு​தி​களில் குளிர் அதி​கரித்​துள்​ளது. இது இயல்​புக்கு மாறான வானிலை​யால்​தான்​ ஏற்​பட்​டுள்​ளது. இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here