டெல்லி, கொல்கத்தா ஐ-பேக் அலுவலகம் உட்பட 10 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை – பின்னணி என்ன?

0
23

கொல்​கத்​தா​வில் உள்ள ஐ-பேக் நிறுவன அலு​வல​கம், அதன் இயக்​குநர் வீடு மற்​றும் டெல்​லி​யில் உள்ள 4 இடங்​கள் உட்பட 10 இடங்​களில் அமலாக்​கத் துறை அதி​காரி​கள் நேற்று சோதனை நடத்​தினர்.

மேற்கு வங்க மாநிலத்​தில் ஈஸ்​டர்ன் கோல்​பீல்ட்ஸ் நிறுவனத்துக்கு சொந்​த​மான சுரங்​கத்​தில் இருந்து சட்டவிரோதமாக நிலக்​கரி தோண்டி எடுக்​கப்​பட்​ட​தாக புகார் எழுந்​தது. இது தொடர்​பாக 2020-ம் ஆண்டு சிபிஐ வழக்கு பதிவு செய்து விசா​ரணை நடத்தி வரு​கிறது. இந்த வழக்​கின் அடிப்படையில், அமலாக்​கத் துறை தனி​யாக வழக்கு பதிவு செய்து விசா​ரித்து வரு​கிறது.

குறிப்​பாக இந்த முறை​கேட்​டில் பயனடைந்​த​தாக சந்​தேகிக்​கப்​படு​பவரும் மேற்கு வங்க முதல்​வர் மம்தா பானர்​ஜி​யின் உறவினரு​மான திரிண​மூல் காங்​கிரஸ் பொதுச் செய​லா​ளர் அபிஷேக் பானர்ஜி உள்​ளிட்​டோரிடம் அமலாக்​கத் துறை அதிகாரிகள் விசா​ரணை நடத்தி உள்​ளனர்.

இந்த சூழலில், கொல்​கத்​தா​வின் சால்ட்​லேக் பகு​தி​யில் உள்ள, அரசி​யல் ஆலோ​சனை வழங்​கும் ஐ-பேக் நிறுவன அலு​வல​கம் மற்றும் அதன் இயக்​குநர் பிர​திக் ஜெயின் வீடு மற்​றும் டெல்​லி​யில் உள்ள 4 இடங்​கள் உட்பட மொத்​தம் 10 இடங்​களில் அமலாக்கத்துறை அதி​காரி​கள் நேற்று காலை 7 மணி முதல் சோதனை நடத்தினர்.

மம்தா மீது புகார்: இதுகுறித்து அமலாக்​கத் துறை வெளி​யிட்ட அறிக்​கை​யில், “பிரதீக் ஜெயின் வீட்​டில் சோதனை நடத்​தி​ய​போது, இங்கு தனது உதவி​யாளர்​களு​டன் வந்த முதல்​வர் மம்தா பானர்​ஜி, சில ஆவணங்​கள் மற்​றும் மின்​னணு சாதனங்​களை எடுத்​துச் சென்​றார்.

இது​போல, சால்ட்​லேக் பகு​தி​யில் உள்ள ஐ-பேக் அலு​வல​கத்​துக்கு தனது உதவி​யாளர்​களு​டன் வந்த மம்​தா, அங்​கிருந்த சில ஆவணங்​கள் மற்​றும் மின்​னணு ஆதா​ரங்​களை எடுத்​துச் சென்றார்” என கூறப்​பட்​டுள்​ளது.

கடந்த 2021-ம் ஆண்டு நடை​பெற்ற சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் திரிண​மூல் கட்​சிக்கு ஐ-பேக் நிறு​வனம் வியூ​கம் அமைத்​துக் கொடுத்​தது. அத்​துடன் கட்​சி​யின் தகவல் தொழில்​நுட்ப மற்​றும் ஊடக செயல்​பாடு​களை கவனித்​து வரு​கிறது என்​பது குறிப்பிடத்தக்​கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here