புதிய ஓய்வூதியத் திட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பதா? – தலைமைச் செயலக சங்கத்தை எதிர்த்து 200 ஊழியர்கள் முற்றுகை

0
29

அரசு ஊழியர்​களுக்கு மீண்​டும் பழைய ஓய்​வூ​தி​யத் திட்​டத்தை அமல்​படுத்த வேண்​டும் என்று ஜாக்​டோ-ஜியோ கூட்​டமைப்பு கடந்த 20 ஆண்​டு​களுக்கு மேலாக போராடி வந்​தது.

இந்த கூட்​டமைப்​பில் தலை​மைச் செயலக சங்​க​மும் உள்​ளது. இந்த நிலை​யில், தமிழ்​நாடு உறு​தி​யளிக்​கப்​பட்ட ஓய்​வூ​தி​யத் திட்​டம் என்ற திட்​டத்தை அரசு கடந்த 3-ம் தேதி அறி​வித்​தது.

பழைய ஓய்​வூ​தி​யத் திட்​டம்​போல, உறு​தி​யான ஓய்​வூ​தி​யம், பணிக்​கொடை இருப்​ப​தால் இத்​திட்​டத்தை ஜாக்​டோ-ஜியோ கூட்​டமைப்​பின் நிர்​வாகி​கள் வரவேற்​றனர். இதற்​கிடையே, அரசு ஊழியர்​களிடம் மாதம்​தோறும் பிடித்​தம் செய்​யப்​படும் 10 சதவீத தொகை திருப்​பித் தரப்​படு​மா, தரப்​ப​டாதா என்று தெளி​வாக கூறப்​ப​டாத​தால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்​களிடம் இத்​திட்​டத்​துக்கு சற்று அதிருப்​தி​யும் உள்​ளது.

இந்த நிலை​யில், தமிழ்​நாடு தலை​மைச் செயலக சங்​கத்​தின் கூட்​டம் அதன் தலை​வர் கு.வெங்​கடேசன் தலை​மை​யில் நேற்று மதிய உணவு இடைவேளை​யின்​போது நடந்​தது. அப்​போது, தலை​மைச் செயலக ஊழியர்கள் 200-க்​கும் மேற்​பட்​டோர் சங்க அலு​வல​கத்தை முற்​றுகை​யிட்டு போராட்​டம் நடத்​தினர்.

புதிய ஓய்​வூ​தி​யத் திட்​டத்​துக்கு ஏன் ஆதரவு அளிக்​கிறீர்​கள் என்று கேட்​டு, சங்க நிர்​வாகி​களு​டன் வாக்​கு​வாதத்​தில் ஈடு​பட்​டனர். ‘ஊழியர்​களிடம் பிடித்​தம் செய்​யப்​படும் பங்​களிப்​புத் தொகையை ஓய்​வு​பெறும்​போது திருப்​பித் தரவேண்​டும்.

புதிய ஓய்​வூ​தி​யத் திட்​டத்தை ஏற்​கக் கூடாது. மீண்​டும் பழைய ஓய்​வூ​தி​யத் திட்​டத்​தையே அமல்​படுத்த வலி​யுறுத்தி போராட்​டம் நடத்த வேண்​டும்’ என்று சங்க நிர்​வாகி​களிடம் வலி​யுறுத்​தினர். ஊழியர்​களின் திடீர் முற்​றுகைப் போ​ராட்​டத்​தால் தலை​மைச் செயல​கத்​தில்​ பரபரப்​பான சூழல் காணப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here