தாம்பரம் காவல் ஆணையராக கடந்த ஜூலை மாதம் பதவியேற்ற அபின் தினேஷ் மோதக் பணிமாற்றம் செய்யப்பட்ட நிலையில், ஏற்கெனவே இங்கு ஆணையராக இருந்த ஏடிஜிபி அமல்ராஜ் மீண்டும் தாம்பரம் மாநகர காவல் ஆணையராக நியமிக்கப்பட்டார். அவர் நேற்று பொறுப்பேற்றார். அவருக்கு காவல் துறை அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
இதேபோல, ஆவடி காவல் ஆணையராக இருந்த ஏடிஜிபி கி.சங்கர், சிறைத் துறை இயக்குநராகப் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டார்.
இதையடுத்து, தென் மண்டல ஐ.ஜி.யாகப் பொறுப்பு வகித்து வந்த பிரேம் ஆனந்த் சின்ஹாவுக்கு ஏடிஜிபியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டு, ஆவடி காவல் ஆணையராக நேற்று பொறுப்பேற்றார். அவருக்கு கூடுதல் ஆணையர் பவானீஸ்வரி மற்றும் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.



