குழந்தைகளுக்கு சினிமாவில் எதை அறிமுகப்படுத்துகிறோம்?

0
19

அறிமுக இயக்​குநர் பி.​நா​ராயணன் இயக்​கி​யுள்ள அனிமேஷன் படம், ‘கிகி அண்ட் கொகொ’. இனிகா புரொடக் ஷன்ஸ் வழங்​கும் குழந்​தைகளுக்​கான இந்​தி​யா​வின் முதல் அனிமேஷன் படம் இது. இந்​தப் படத்​தின் டீஸர் வெளி​யீட்டு விழா சென்​னை​யில் நடைபெற்​றது.

விழா​வில் இயக்​குநர் நாராயணன் பேசும்​போது, “ஸ்​பைடர்​மேன் பறப்​பது, ஹீமேன் அடிப்​பது என நிஜத்​தில் நடக்​காத பல ஃபேன்​டசி விஷ​யங்​களைத்​தான் குழந்​தைகளுக்கு சினி​மா​வில் அறிமுகப்​படுத்​து கிறோம். நடை​முறை​யில் என்ன நடக்​கிறது என்பதை இந்தப் படத்​தில் காட்​டி​யுள்​ளோம். யாரை​யும் அடிக்​கப் போவ​தில்லை, யாரும் பறக்​கப் போவ​தில்​லை. நாம் சராசரி மனித​னாக இருக்​கும்​போது யாருக்​காவது உதவு​கிறோம், சிரிக்கிறோம், நன்​றியை நினைத்​துப் பார்க்​கிறோம், அன்​பாக இருக்​கிறோம்.

இந்த நடை​முறை விஷ​யங்​களைப் படத்​தில் பேசி​யிருக்​கிறோம். நம் குழந்​தைகளுக்கு நாம் கொடுக்​கும் மிகப்​பெரிய சொத்தே அவர்​கள் குணம்​தான். எல்​லோரை​யும் அன்​பாக வைத்​திருங்​கள், அன்பு உங்​களுக்​குத் திரும்​பக் கிடைக்​கும்​” என்​றார்​. படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here