உலக விரைவு செஸ் போட்டியில் வெண்கலம் வென்ற ஹம்பிக்கு பிரதமர் மோடி புகழாரம்

0
22

உலக விரைவு செஸ் போட்​டி​யில் வெண்​கலம் வென்றுள்ள இந்​திய வீராங்​கனை கோனேரு ஹம்​பிக்கு பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

கத்​தார் நாட்​டிலுள்ள தோஹா நகரில் உலக விரைவு மற்​றும் பிளிட்ஸ் செஸ் போட்டி நடை​பெற்று வரு​கிறது. இதில் மகளிர் பிரிவில் இந்​திய வீராங்​கனை கோனேரு ஹம்பி 3-வது இடம் பிடித்து வெண்​கலப் பதக்​கத்​தைக் கைப்​பற்​றி​னார். இதைத் தொடர்ந்து கோனேரு ஹம்​பிக்கு பிரதமர் நரேந்​திர மோடி வாழ்த்துகளைத் தெரி​வித்​துள்​ளார்.

இதுதொடர்​பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்​கத்​தில் கூறியுள்ளதாவது: கோனேரு ஹம்​பிக்கு பாராட்​டுக்​கள். உலக விரைவு செஸ் போட்​டி​யின் மகளிர் பிரி​வில் வெண்​கலம் வென்று அவர் சாதனை படைத்​துள்​ளார். செஸ் விளை​யாட்டு மீது அவர் காட்​டும் அர்ப்பணிப்பு பாராட்​டுக்​குரிய​தாகும். தொடர்ந்து அவர் வெற்றிகளைக் குவிக்க வாழ்த்​துக்​கள். இவ்​வாறு அவர் கூறியுள்ளார்.

இந்​தப் போட்​டி​யின் ஆடவர் பிரி​வில் இந்​திய கிராண்ட் ​மாஸ்​டர் அர்​ஜுன் எரி​கைசி 9.5 புள்​ளி​களு​டன் 3-வது இடம் பிடித்து வெண்கலப் பதக்​கம் வென்​றார். பதக்​கம் வெல்​வார்​கள் என எதிர்பார்க்கப்​பட்ட தமிழக வீரர்​களான குகேஷ் 8.5 புள்​ளி​களு​டன் 20-வது இடத்​துக்​கும், ஆர்.பிரக்​ஞானந்தா 8.5 புள்​ளி​களு​டன் 28-வது இடத்தை​யும் பெற்​றனர். ஆடவர் பிரி​வில் நார்வே வீரர் மாக்​னஸ் கார்ல்சன் முதலிடம்​ பிடித்​து தங்​கம்​ வென்​றார்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here